தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடக் கூடாது!
8 Aug 2026, 9:51 pm

தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடக் கூடாது!

சேலத்தில் பெ.சண்முகம்பேட்டி

சேலம், ஆக.7-தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் பாஜக அரசு பிளவுபடுத்தும் நோக்கோடு செயல்படுவதைத் தடுத்து, குறிப்பாக தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடாமல் இருக்க அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்வலியுறுத்தியுள்ளார். சேலத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அனைத்துக் கட்சிகளின் பங்கு அவசியம்

சென்னையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் திமுக, அதிமுக உள்

ளிட்ட பிரதான கட்சிகள் கலந்துகொள்ளாதது வருத்தமளிப்பதாகத் தெரிவித்த அவர், தமிழகத்தின் பிரதிநிதித்துவ விகிதம் குறையும் அபாயம் உள்ளதாலேயே இக்கூட்டத்திற் குத் தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்ததாகக் கூறினார். வரவிருக்கும் நாட்களில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரை நடத்தி இம் மசோதா குறித்து விவாதிக்க ஒன்றிய அரசு தயாரிப்பு செய்துவரும் சூழலில், தமிழக அரசின் இந்தக் கூட்டத் தில் திமுக கலந்துகொண்டிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை இருந்தாலும், 1971 மக்கள் தொகை கணக்கீட்டின்படி தமிழகத்தின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுவதைத் தடுக்க ஒத்த கருத்து அவசியம் எனவும் அவர் தெளிவுபடுத்தினார். நாடாளுமன்றத் தொகுதி எண் ணிக்கையை மாற்றி பாஜக தனது பலத்தைவளர்த்துக்கொள்ளும் தந் திரமே இந்தத் தொகுதி மறுசீரமைப்பு எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

தமிழக பட்ஜெட் குறித்த விமர்சனங்கள்

தவெக அரசு தாக்கல் செய்துள்ள முதல் முழு நிதிநிலை அறிக்கை குறித்துப் பேசிய பெ. சண்முகம், பட்ஜெட் முழுமையான திருப்தியைத் தரவில்லை எனக் கூறினார். அனைத்து மகளிரும் எதிர்பார்த்த ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை குறித்தும்,தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளிக்கப்பட்ட வேலையில்லா கால நிவாரணம் ரூ. 4,000 குறித்தும் பட்ஜெட்டில் எத்தகைய அறிவிப்பும் இடம்பெறவில்லை என்றார். மேலும்,அனைத்துத் துறை காலிப்பணியிடங்களையும் நிரப்புவதற்குப் பதிலாகத் தற்காலிக, ஒப் பந்த மற்றும் மதிப்பூதிய முறையிலேயே பணியாளர்கள் தேர்வு செய் யப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சேலம் குடிநீர் தனியார்மய எதிர்ப்புப் போராட்டம்

சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகம் தனியார்மயமாக்கப்படுவது குறித்து முதலமைச்சரிடம் நேரில் முறையிடப்பட்டு உள்ளதாகவும், குடிநீர்தனியார்மயத்தை ரத்து செய்யக் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீர்தனியார்மயமான பின்பு தண்ணீர் பிரச்சனை தீவிரமடைந் துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், குடிநீர் போன்ற அத்தியாவசிய சேவையைத்தனியார்வசம் வழங்குவது ஆபத்தானது என்றார். இக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 21 அன்று சேலத்தில் பிரம் மாண்டமான போராட்டம் நடத்தப் படும் என்றும், இ்ப்பிரச்சனை சட்டமன்றத்தில் எழுப்பப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

தனியார் பேருந்து கட்டண உயர்வு கண்டனம்

சேலம், நாமக்கல், ஈரோடு உள் ளிட்ட சில மாவட்டங்களில் தனியார் பேருந்து முதலாளிகள் தன்னிச்சையாகக் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர் எனக் குறிப்பிட்ட அவர், அரசின் சட்ட நடவடிக்கைக்கு எதிராகச் செயல்படும் தனியார் பேருந்து முதலாளிகள் மீது தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், சட்டவிரோதமாகச் செயல் பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் டி. ரவீந்திரன், செ. முத்துகண்ணன் மற்றும் மாவட்டச் செயலாளர் ஏ. ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.