தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பதிவுத்துறையில் புதிய திட்டங்கள் வெளியாகும்! அமைச்சர் தகவல்

28 Jun 2026, 2:09 am
பதிவுத்துறையில் புதிய திட்டங்கள் வெளியாகும்! அமைச்சர் தகவல்
<p><strong>பதிவுத்துறையில் புதிய திட்டங்கள் வெளியாகும்! அமைச்சர் தகவல்</strong></p><p>​​​​​​​சேலம், ஜூன் 27- பதிவுத்துறையில் புதிய திட்டங்கள் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியாகும் என சேலத்தில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பேட்டியளித்தார். சேலம் மரவனேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளி நிகழ் வில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல் வன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பின்னர் செய்தியா ளர்களிடம் பேசிய அவர், பத்திரப்பதிவுத் துறையில் புதிய திட்டங்கள் குறித்து வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாகும். மேலும், பதிவுத்துறையை முழுமை யாக ஆன்லைன் மயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. தற்போது முதல்முறையாக பதிவு செய் யப்படும் பத்திரங்களை ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் திட்டம் ஓரிரு வாரங்களில் செயல்பாட்டுக்கு வரும். முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி தொடர்பாக அதிகாரிகளு டன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதுகுறித்த அறி விப்பும் பட்ஜெட்டில் வெளியாகும். மேலும், முகூர்த்த நாட்களில் அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறுவதால் இணையதளத்தில் இடர்பாடுகள் ஏற்படு வதாக குறிப்பிட்ட அவர், அந்த தொழில்நுட்ப சிக்கல்கள் விரைவில் சரிசெய்யப்படும் என்று உறுதியளித்தார். தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் முக்கிய துறைகளில் பத்திரப்பதிவுத்துறையும் ஒன்றாக இருப்பதாகவும், ஆண்டு தோறும் வருவாய் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்த அவர் வருவாயை மேலும் உயர்த்த தேவையான நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வரி விதிப்பு தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய முடிவுகள் எடுக்கப்படும், என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.