தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நூறு ஏக்கர் நிலத்தை 12 ஏக்கராக குறைக்கும் தனியார் பல்கலை. சட்டத் திருத்தம் யாருக்காக? - சி.ஸ்ரீராமுலு

13 Sept 2026, 10:12 pm
நூறு ஏக்கர் நிலத்தை 12 ஏக்கராக குறைக்கும் தனியார் பல்கலை. சட்டத் திருத்தம் யாருக்காக? -  சி.ஸ்ரீராமுலு

நூறு ஏக்கர் நிலத்தை 12 ஏக்கராக குறைக்கும் தனியார் பல்கலை. சட்டத் திருத்தம் யாருக்காக? - சி.ஸ்ரீராமுலு

தனியார் பல்கலைக்கழகங்கள் அமைப்பதற்கான நிபந்தனைகளை வெகுவாக தளர்த்தி தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள சட்டத் திருத்த மசோதா, மாணவர்களின் எதிர்காலத்தை மட்டுமல்ல, தலைமுறை தலைமுறையாக கல்வி மூலம் மேலெழுந்த ஏழை, நடுத்தரக் குடும்பங்களின் கனவுகளையும் பாதிக்கக் கூடும் என அச்சம் எழுந்துள்ளது. மாணவர் சங்கம் முதல் அரசியல் கட்சிகள் வரை, கல்வித் துறையின் பல்வேறு தரப்பினரும் இந்த மசோதாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை தொடங்குவதற்கு தேவையான நிலம் மற்றும் நிதி தேவையை பெருமளவு குறைத்து, 2019 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யும் புதிய மசோதா, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் விரைவில் இது சட்டமாக மாறி அமலுக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு சட்டப்படி, சென்னை மாநகராட்சிஎல்லைக்குள் தனியார் பல்கலைக்கழகம் தொடங்க குறைந்தபட்சம் 100 ஏக்கர் நிலமும், மற்ற பகுதிகளில் 50 ஏக்கர் நிலமும், அத்துடன் ரூ. 50 கோடி நிரந்தர அறக்கட்டளை நிதியும் கட்டாயம் தேவை என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

மேலும், இந்த பல்கலைக் கழகங்கள் மாநில அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையை கண்டிப்பாக பின்பற்றியே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும், கல்விக் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

கடந்த கால முயற்சியும் கடும் எதிர்ப்பும்

கடந்த திமுக ஆட்சியில் அரசு உதவிபெறும் மற்றும்தனியார் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கும் நோக்கில் 2025 அக்டோபரில் இதே சட்டத்தில் ஒருதிருத்தம் கொண்டுவரப் பட்டது. ஆனால்,இது ஆசிரியர்கள், பணியாளர்களை பாதிக்கும் என்றும், ஏழை மாணவர்களுக்கான குறைந்த கட்டணகல்வி வாய்ப்பு பறிபோகும் என்றும் ஆசிரியர், மாணவர் சங்கங்கள் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் கடுமையாகஎதிர்த்ததை அடுத்து, அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த மசோதாவை திரும்பப் பெற்றார். 2026பிப்ரவரியில் அம்மசோதா முறையாக திரும்பப் பெறப்பட்டது.

புதிய அரசின் தாராளமும் திருத்தமும்

இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெகஅரசு, நிபந்தனைகளை மேலும் தளர்த்தி ஒரு படி மேலே சென்றுபுதிய திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது.செப். 8 அன்று உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் இதனை பேரவையில் அறிமுகம் செய்ய, இடதுசாரிக்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.இதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் வெறும் 12 ஏக்கர் நிலமும், பிற மாநகராட்சிகள் மற்றும்நகராட்சிகளில் 18 ஏக்கர் நிலமும், தமிழகத்தின் பிற பகுதிகளில் 25 ஏக்கர் நிலமும் இருந்தால் போதுமானது எனபுதிய விதிமுறை கொண்டுவரப் பட்டுள்ளது.நிலப் பற்றாக்குறையை காரணம் காட்டி அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக விளக்கம் தரப்பட்டாலும், இதனுடன்நிரந்தர அறக்கட்டளை நிதியும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்த மாற்றங்கள்,ஏற்கனவே இயங்கும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கும், சிவ் நாடார் மற்றும் சாய் பல்கலைக்கழகங்களுக்கும்பொருந்தும் என்பது மேலும் விவாதத்தை தூண்டியுள்ளது.

பேரவையில் சிபிஎம், சிபிஐ, பாமக ஆகிய கட்சிகள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அரசு பின்வாங்கவில்லை. மசோதா அறிமுகத்தின் போது எதிர்க்கட்சிகள் பல கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் விவாதப் பொருளாகியுள்ளன.

யாருக்காக இந்த சட்டத் திருத்தம்?

நில அளவை இவ்வளவு கடுமையாக குறைத்திருப்பதன் நோக்கம் உண்மையிலேயே என்னவென்றால், ஏற்கனவே பெற்றோரிடம் அதீத கட்டணம் வசூலிக்கும் தனியார் பல்கலைக்கழகங்களின் வணிகஆதாரத்தை மேலும் பலப்படுத்துவதே ஆகும்.

குறிப்பாக, இப்படிப்பட்ட ஒரு சட்ட திருத்தம்கொண்டு வர வேண்டும் என்று யாருமே கேட்கவில்லை. ஆனால் இதனால் அதிக லாபமும் பயனும்அடையப்போவது யார் என்றால், கல்வித்துறையில் கோலோச்சும் பெருநிறுவனங்களும், தனியார் கல்விவணிகர்களும்தான். சென்னையில் உள்ள பலமுன்னணி கல்லூரிகள் இதன் மூலம் பல்கலைக்கழகங்களாக தங்களை “உயர்த்திக் கொள்ளும்” வாய்ப்பைப் பெறுகின்றன.இது போன்ற தனியார் பல்கலைக்கழகங்கள் அதிகரிக்கும்போது, அவற்றின் மாணவர் சேர்க்கையில் நுழைவுத் தேர்வுகள் புகுத்தப்பட்டு, இட ஒதுக்கீட்டு நடைமுறை படிப்படியாக செயலிழந்து, தலைமுறைதலைமுறையாக ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான வாய்ப்புகள்மேலும் சுருங்கும் என்ற ஆழ்ந்த அச்சமும் வெளிப்பட்டுள்ளது.

இந்திய மாணவர் சங்கம், கல்வியாளர்கள், இடதுசாரிக் கட்சிகள் என பல்வேறு தரப்பில் இருந்துஎதிர்ப்பு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. எனவே, மக்களின் எதிர்ப்பு குரலுக்கு அரசு செவிசாய்த்து, சர்ச்சைக்குரிய இந்த சட்ட மசோதாவை திரும்பப் பெறுமா, அல்லது அதனை அப்படியே அமல்படுத்துமாஎன்பது இப்போதைக்கு பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.