சரக அடிப்படையிலான பதவி உயர்வு முறை ரத்து இனி சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு!
29 May 2026, 10:11 pm

சரக அடிப்படையிலான பதவி உயர்வு முறை ரத்து இனி சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு!

மதுரை, மே 29 – தமிழ்நாடு காவல்துறையில் சரக அடிப்படையில் வழங்கப்பட்டு வந்த பதவி உயர்வு முறையை ரத்து செய்து, மாநில அளவிலான சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, சுமார் 170 காவ லர்கள் தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார் மற்றும் என்.

செந்தில்குமார் ஆகி யோர் அடங்கிய அமர்வில் நீண்ட காலமாக விசாரணையில் இருந்து வந்தது.

இந்த வழக்கின் விசாரணை மீண்டும் வெள்ளியன்று நடை பெற்றது.

அப்போது, இவ்விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமனிடம் நீதிபதிகள் அறி வுறுத்தினர்.

இதையடுத்து, தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தாக்கல் செய்த மனுவில், ஆயு தப்படையில் கிரேட்-2 காவலராக தேர்வு செய்யப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டு, சிறப்பு சார்பு- ஆய்வா ளர், சார்பு- ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் பதவி உயர்வுகளுக்கு மாநில அளவிலான சீனியாரிட்டி முறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கடந்த 2006 முதல் அமலில் இருந்து வந்த சரக அளவி லான பதவி உயர்வு வாரியத் தேர்வு முறை தேவையில்லை என்று அரசு முடிவு செய்திருப்பதாக குறிப்பிட்டனர்.

அதன்படி, மாநில அளவிலான சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும், குறிப்பாக 1993-ஆம் ஆண்டு பேட்ஜில் தேர்வாகி தற்போது வரை பணியில் உள்ள ஆயுதப்படை காவலர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மேலும், மாநில அளவிலான சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து 2 மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என்றும், 2026 ஜனவரி 1-ஆம் தேதி பணியில் இருப்ப வர்களுக்கு இந்த உத்தரவு அமல் படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதேநேரத்தில், 2025 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும், அவர்கள் பணப்பலன் அல்லது நிலுவைப் பலன்களை கோர முடியாது என்றும் கூறப்பட்டது.

ஏற்கனவே சரக அடிப்படையி லான தேர்வு மூலம் பதவி உயர்வு பெற்றவர்களின் பதவி அல்லது பலன்களை பாதிக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவு படுத்தியது.

உடனே அரசாணை பிறப்பிக்க உத்தரவு மாநில அளவிலான சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதற்கான அரசாணையை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் விரைந்து நட வடிக்கை எடுத்து நீதிமன்றத்திற்கு உதவிய அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமனுக்கு நீதிபதிகள் பாராட்டுக ளையும் தெரிவித்தனர்.