புதிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு
25 Sept 2026, 10:10 pm

புதிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு

சென்னை, செப். 25 -சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை விசாரிக்க புதிய சிறப்புபுலனாய்வுக் குழுவை அமைத்து தமிழ்நாடு காவல் துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக ஜெம் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆதாரங்கள் வெளியான நிலையில், 2024 ஆம் ஆண்டு இது தொடர்பாக காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் புகார் அளித்தும் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என தகவல்வெளியானது. இதைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களாக மத்திய குற்றப் பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

வழக்கை மூடி மறைக்க கோடிக்கணக்கான ரூபாய் பரிமாறப்பட்டதாகவும் தகவல் வெளியான நிலையில், 2024 ஆம் ஆண்டு சென்னை காவலர் ஆணையராக இருந்த அருண், கூடுதல் ஆணையராக இருந்த கண்ணன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து, ஊனமாஞ்சேரி காவலர் பயிற்சி பள்ளி ஏடிஜிபியாக இருந்த அருண், கோவை ஆணையர் கண்ணன், கோயம்பேடு உதவி ஆணையர் யாஸ்மின், காவல் உதவி ஆய்வாளர் மகேஷ் உள்ளிட்ட 5 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

இந்த வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய், காவல் ஆணையர் அமல்ராஜை அழைத்து உத்தரவிட்டதைத் தொடர்ந்து, டிஜிபி புதிய சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்துள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் தேன்மொழி, மேற்கு மண்டல இணை ஆணையர் திஷா மீட்டல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் கீதாஞ்சலி, டிஜிபி அலுவலக செய்தி தொடர்பு அதிகாரி முத்தரசி ஐபிஎஸ் ஆகிய நான்கு பெண் அதிகாரிகள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.