தமிழ்நாடு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: அரசுப் பள்ளிகளில் 92.16% தேர்ச்சி
8 May 2026, 12:59 pm

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 92.16 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட வாரியாகப் பார்க்கையில், ஈரோடு மாவட்டம் 98.24 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்திலும், சிவகங்கை 96.97 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், திருச்சி 96.55 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

பாட வாரியான முழு மதிப்பெண் பட்டியலில், கணினி அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 6,945 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அடுத்ததாக, கணினிப் பயன்பாடுகள் பாடத்தில் 2,099 பேரும், கணக்குப் பதிவியல் பாடத்தில் 1,946 பேரும், கணிதப் பாடத்தில் 732 பேரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மொத்தமாக, ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் 16,024 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழ் மொழிப் பாடத்தில் 83 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

மேலும், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என்றும், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள் ஜூன் 28 முதல் ஜூலை 7 வரை நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.