9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.8 மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறைகூவல்
14 Jun 2026, 10:09 pm
<p><strong>9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.8 மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறைகூவல்</strong></p><p>சென்னை, ஜூன் 14 - 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.8 அன்று மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ் நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது. இந்த கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் கூட்டம் ஜூன் 11 அன்று சென்னை யில் தலைவர் என்.ஜெய்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செய லாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணி யன், பொருளாளர் ந.பர்வத ராஜன் மற்றும் அரசு ஊழி யர், ஆசிரியர், மின்சாரம், போக்குவரத்து, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் துறை ஆகிய 5 ஓய்வூதியர் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், 8 ஆவது ஊதியக் குழு விதி களில் ஓய்வூதியர்கள் குறித்த பிரிவை இணைக்க வேண்டும். கடந்த காலங்களை போன்று ஓய்வூ திய உயர்வு வழங்க பரிந் துரை செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட் டத்தை அமல்படுத்த வேண் டும். ஓய்வூதிய மறுசீர மைப்பு என்ற பெயரில் ஓய்வூ தியர்களிடையே பிரி வினையை உருவாக்கும் நாடாளுமன்ற தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். 70 வயது முடிந்த ஓய்வூ தியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், குடும்ப பாது காப்பு நிதியை 1.50 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண் டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியமாக 7,850 ரூபாய் வழங்க வேண்டும். ஓய்வூதியர், குடும்ப ஓய்வூ தியர் உயிருடன் இருந்தா லும், விதவை மகள், விவா கரத்தானவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண் டும். ஒப்பந்த தொழிலாளி யாக பணியாற்றி பணிக் காலத்தை கணக்கில் கொண்டு ஓய்வூதியம், ஓய் வூதிய பலன்களை வழங்க வேண்டும். அரசு, வாரியங்கள் வெளியிட்ட காசில்லா மருத்துவ உத்தரவில் சொல்லப்பட்ட மீட்சி தொ கையை வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு திட்டத்தை போக்கு வரத்து போன்ற பொதுத் துறை நிறுவன ஓய்வூதி யர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் ஆகிய 9 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி ஆக.8 அன்று அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவெ டுக்கப்பட்டுள்ளது.</p>
