தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆரம்ப சுகாதார செவிலியர்களை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றுவதை கைவிடுக! செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தல்

10 Jul 2026, 8:52 pm
ஆரம்ப சுகாதார செவிலியர்களை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றுவதை கைவிடுக! செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தல்
<p><strong>ஆரம்ப சுகாதார செவிலியர்களை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றுவதை கைவிடுக! செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தல்</strong></p><p>சென்னை, ஜூலை 10 - ஆரம்ப சுகாதார செவிலியர்களை அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் நே.சுபின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக கிராமப்புற ஏழை மக்கள் பயன்பெறுகின்றனர். இங்குள்ள 192 செவிலியர், அரசு மருத்துவமனைகளில் உள்ள 100 செவி லியர் என 292 பணியிடங்களை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரி விற்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த திமுக அரசு ஆட்சியில் நடத்தப் பட்ட கடுமையான போராட்டங்களுக்கு பின், அவசர சிகிச்சை பிரிவில் புதிய செவிலியர் பணியிடங்கள் உருவாக்க ஒப்புக் கொண்டனர். அதற்கான பரிந் துரை மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்தின் மூலம் அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டிருந் தது. இதை நிராகரித்துவிட்டு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் பணியி டங்களை ஒழித்துக் கட்டும் முயற்சியை ஏற்க முடியாது. தமிழ்நாட்டின் பெரும்பாலான மருத்துவமனைகளில் செவிலியர் தட்டுப்பாடு உள்ளது. அதற்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்காமல், தற்போதுள்ள பணியிடங்களை ஒழிக் கும் முயற்சியை கைவிட வேண்டும். மருத்துவ பணியாளர் தேர்வு வாரி யத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட சுமார் 6 ஆயிரம் செவிலியர்கள் 9 வரு டங்களாக பணி நிரந்தரம் செய்யப்படா மல் உள்ளனர். தவெக அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி மருத்துவ பய னாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தர செவிலியர் பணியிடங்களை உருவாக்கி, அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என கூறப்பட்டு உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.