தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

16 May 2026, 10:47 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

தமிழக முதலமைச்சருடன் இலங்கை எம்.பி. சந்திப்பு

சென்னை: தமிழ்நாட்டிற்கு வந்துள்ள இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனன் முதல மைச்சர் விஜயை சந்தித்தார். பின்னர், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழ் மக்களின் சார்பில்முதலமைச்சர் விஜயிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்தார். “தமிழ் பேசுகிறோம் என்ற ஒரே காரணத்திற்காக மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இலங்கையில் இனப் படுகொலை செய்யப்பட்டனர். முதலமைச்சர் விஜய், ஈழ மக்களின் நலனில் அவசரப்படாமல் ஆழமாக சிந்தித்து, ஆறுதல் தரும் வகையில் செயல்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

கள்ள ஓட்டு விவகாரம் தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெளி நாட்டுக் குடியுரிமை பெற்ற 25 பேர் வாக்களித்துள்ளதாக தெரியவந்துள்ளது. வாக்களித்த பின்னர் வெளிநாடு செல்ல முயன்றபோது, சிலர் விமான நிலையத்தில் பிடிபட்ட னர். அதைத்தொடர்ந்தே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் கள்ள ஓட்டு போட்டதாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ள னர். இதனையடுத்து, கள்ள ஓட்டு போடப்பட்ட தொகுதி களின் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

எரிபொருள் சிக்கனம் ஆளுநர் பாதுகாப்பு வாகன எண்ணிக்கை குறைப்பு

சென்னை: மேற்குஆசிய போர் நெருக்கடியை முன்னிட்டு எரிபொருட்களைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று தமிழக ஆளுநர் அர்லேகர் தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக் கையை குறைத்துள்ளார். இதுவரை அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது 10 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 4 ஆகக் குறைக்கப் பட்டுள்ளது. பீகார் முதல்வர் சாம்ராட் சவுத்ரி, மகாராஷ்டிர முதல மைச்சர் ஆகியோரும் இதேபோன்று தங்கள் பாதுகாப்பு வாக னங்கள் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டுள்ளனர். தில்லி அரசு அனைத்து அரசுத்துறை ஊழியர்களும் வாரத்தில் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ளது.

மனைவியின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கோரிக்கை

சென்னை: நகைச்சுவை திரை கலைஞர் முத்துக்காளை யின் மனைவி மாலதி (47), மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவுக்காக, அறுவை சிகிச்சை செய்யப்பட்டும், கிருமி தொற்றா லும் சென்னை கீழ்பாக்கம் கே.எம்.சி. மருத்துவமனை ஐசியூ வில் 17 நாட்களாக நினைவின்றி இருந்து வருகிறார். இந்நிலை யில், தனது மனைவிக்கு மேல் சிகிச்சை அளிக்க உதவி வேண்டும் என்று நடிகர் முத்துக்காளை, முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, நடிகர் முத்துக் காளையின் மனைவியை, பள்ளிக்கல்வி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

கள்ள ஓட்டு விவகாரம் அமெரிக்க குடியுரிமை பெற்ற முதியவர் கைது!

சென்னை: சென்னை கே.கே. நகர் வாசியும், அமெரிக்க குடியுரிமை பெற்றவருமான கிஷோர் (64), விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். துபாய் வழியாக அமெ ரிக்கா செல்ல வந்திருந்த அவரது இடது கை ஆள் காட்டி விரலில் வாக்களித்த தற்கான அடையாள மை இருப்பதை குடியுரிமை அதி காரிகள் கண்டுபிடித்தனர். விசாரணையில் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் அவர் வாக்களித்தது தெரிய வந்தது. வெளிநாட்டு குடியு ரிமை பெற்றவர்கள் வாக்க ளித்து விட்டு வெளிநாடு திரும்பும்போது, விமான நிலைய சோதனையில் அடுத்தடுத்து சிக்கி வரு கின்றனர். இதுவரை, வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற 18 பேர், சட்ட விரோதமாக வாக்களித்த குற்றத்திற்காக கைது செய் யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.