தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

1 hour before
தீக்கதிர் முக்கிய செய்திகள்

குரூப்-2, 2ஏ பதவிகளுக்கு விளையாட்டு வீரர்கள் ஆவணங்களை பதிவேற்றலாம்!

சென்னை: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-2 (குரூப்-II மற்றும் 2ஏ பணிகள்) எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து, குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று, இணையவழி விண்ணப்பத்தில் ‘சிறந்த விளை யாட்டு வீரர்’ என்று உரிமை கோரியுள்ள விண்ணப்பதா ரர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் தாங்கள் பெற்ற விளையாட்டுச் சாதனைகள் தொடர்பான ஆவணங்களை இணைய வழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பி எஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஸ்ரீவெங்கட பிரியா அறிவித்துள்ளார். அசல் விளையாட்டுச் சான்றிதழ்களின் ஸ்கேன் நகல்களை, தேர்வாணையத்தின் இணையதளத்தில் உள்ள ஒருமுறைப் பதிவு கணக்கின் வாயிலாக, ஜூலை 30 ஆம் தேதி இரவு 11.59 மணி வரையில் பதிவேற்றம் செய்யுமாறு விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதற்குத் தவறினால் அத்தகைய விண்ணப்ப தாரர்களின் உரிமை கோரல் மனுக்கள் நிராகரிக்கப்படும் என தேர்வாணையம் எச்சரித்துள்ளது.

3 யானை வழித்தடங்கள்: விரைந்து அறிவிக்க அரசுக்கு உத்தரவு

சென்னை: இறுதி செய்யப்பட்ட 3 யானை வழித்தடங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளி யிட நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யானை வழித்தடங்களை அறிவிக்குமாறு கோரி விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் தாக்கல் செய்த வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வனத் துறை தாக்கல் செய்த அறிக்கையின்படி, ஜவளகிரி -அஞ்செட்டி, பெல்லிக்கல்-ஜவளகிரி உள்ளிட்ட 3 வழித் தடங்கள் ஏற்கெனவே இறுதி செய்யப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 41 வழித்தடங்களில் மேலும் 12 வழித்தடங் களை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

மாமல்லபுரத்தில் மின்சாரம் தாக்கி 4 தொழிலாளர்கள் பலி

சென்னை, ஜூலை 11- கிழக்குக் கடற்கரைச் சாலை, மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சிக் கழ கத்தின் பெட்ரோல் பங்க் அருகே போர்வெல் (ஆழ்துளை கிணறு) அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 4 தொழி லாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காய மடைந்தார். இச்சம்பவத்தில் நெய்குப்பியைச் சேர்ந்த பிரபு (22), வசந்த புரியைச் சேர்ந்த பாலாஜி (33), கடம்பாடி யைச் சேர்ந்த ராஜேந் திரன் (55) மற்றும் மாமல்லபுரத்தைச் சேர்ந்த பாட்ஷா (45) ஆகிய 4 பேர் பரிதாப மாக உயிரிழந்தனர். பணி யின் போது மின்சாரம் தாக்கியதில் காய மடைந்த கரணை கிரா மத்தைச் சேர்ந்த பக வான், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கிறார். இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள காவல்துறை யினர், மின்சாரம் தாக்கியதற்கான கார ணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் கூறாய்வுக் காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளன.

உதயநிதி ஸ்டாலின் லண்டன் பயணம்

சென்னை, ஜூலை 11- தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சென்னையி லிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் துபாய் வழியாக லண்டனுக்குப் புறப்பட்டுச் சென் றார். தனது மகன் இன்பநிதியின் பட்ட மளிப்பு விழா, வரும் திங்களன்று அந்தப் பல்கலைக்கழக வளா கத்தில் நடைபெற வுள்ளது. இந்த விழா வில் மனைவி கிருத்திகா வுடன் கலந்து கொள் கிறார். பட்டமளிப்பு விழா வில் பங்கேற்பதற்காக, கடந்த ஜூலை 4 ஆம் தேதியே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்காவுடன் லண்டன் சென்றுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.