தீக்கதிர் முக்கிய செய்திகள்
24 Jul 2026, 9:20 pm

குரூப் 2 தேர்வு அறிவிப்பு ஆக. 11-இல் வெளியீடு

சென்னை: வருடாந்திர தேர்வு கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஒருங்கிணைந்த குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், என்னென்ன பதவிகள், எத்தனை காலியிடங்கள் உள்ளிட்ட முழு விவரங்கள் அதில் இடம்பெறும் என்றும் தமிழ்நாடு அரசுப் பணியா ளர் தேர்வாணையத் தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரி வித்துள்ளார்.

செந்தில் பாலாஜிக்கு பிணை

சென்னை: ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளைய ராஜாவிடம் குதிரைப் பேரம் பேசிய வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியிருந்தது. அதன்படி, வெள்ளிக்கிழமை (ஜூலை 24) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் ஆஜரான அவர், பிணைத்தொகை செலுத்தி சரணடைந் தார். இனி ஜூலை 25 முதல் தினமும் காலை 10.30-க்கும் மாலை 5.30-க்கும் திருவல்லிக்கேணி காவல் நிலையத் தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அவரது சகோ தரர் அசோக்குமார் திங்கட்கிழமை பிணை செலுத்த வுள்ளார்.

மின்சார வாரியம் விளக்கம்

சென்னை: விவசாய இலவச மும்முனை மின்சார நேரம் 18 மணி நேரத்திலிருந்து 14 மணி நேரமாகக் குறைக் கப்படும் என்று செய்தித்தாள் ஒன்றில் வெளியான தக வலை மறுத்த மின்சார வாரியம், தற்போதும் நாளொன் றுக்கு 18 மணி நேரம் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுவதாகவும், இதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு மற்றும் பராமரிப்பு காரணமாக மட்டுமே தற்காலிக தடை ஏற்படலாம் என விளக்கமளித்துள்ளது.

சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவு

சென்னை: சீமை கருவேலம் மரங்களை அகற்ற அனு மதி கோரும் தன்னார்வ அமைப்புகளுக்கு 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும் என வைகோ தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இப்பணிகளை ஒருங்கி ணைக்க வருவாய்த் துறை செயலரை நோடல் அதிகாரியாக நியமித்துள்ளது. புதுக்கோட்டையில் 90% அகற்றம் நடந் திருக்க, வட மாவட்டங்களில் வேலை மெதுவாக நடப்ப தாக அரசு தெரிவித்துள்ளது.

‘மன்னார்குடி எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்க!’

சென்னை: மன்னார்குடி எம்எல்ஏ காமராஜைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி தலைமைச் செயலகத்தில் சபா நாயகரைச் சந்தித்து அமமுக பொருளாளர் கரிகாலன் மனு அளித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக வுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ. காமராஜைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அமமுக அளித்த மனு வில் கோரப்பட்டுள்ளது.

சட்டப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு?

இந்திய பார் கவுன்சில் தகவல் சென்னை, ஜூலை 24 - சட்டப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்த வழிவகை செய்யும் ‘வக்கீல்கள் திருத்த வரைவு மசோதா 2026’-ஐ இந்திய பார் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பொது மக்கள் தங்கள் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை draftadvact2026bill@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் ஜூலை 31 ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் ஒன்றிய சட்ட அமைச்சகத்திற்கு இந்திய பார் கவுன்சில் பரிந்துரை வழங்க உள்ளது.

நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி நியமனம்

சென்னை, ஜூலை 24 - தமிழ்நாடு அரசின் நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானியை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. ஒன்றிய அரசுப் பணியில் இருந்த ராஜேஷ் லக்கானி அண்மையில் மாநில அரசின் பணிக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

திமுக மாணவர் அணியினர் கைது

உளுந்தூர்பேட்டை: நீட் தேர்வை ரத்து செய்ய வேண் டும். தில்லி போராட்டத்தில் கைதானோரை விடுவிக்க வேண்டும். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிர தான் பதவி விலக வேண்டும் என கோரி உளுந்தூர்பேட் டையில் திமுக மாணவரணி, இளைஞரணி நடத்திய சாலை மறியலில், 50-க்கும் மேற்பட் டோரை போலீசார் கைது செய்தனர்.