தீக்கதிர் முக்கிய செய்திகள்
30 Jun 2026, 10:33 pm

கரூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு!

சென்னை, ஜூன் 30- அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து கரூர் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். இதற்கிடை யில் எம்.ஆர். விஜயபாஸ்கர், தான் அதிமுக-விலிருந்தும் விலகி விட்டதாக அறிவித்துள்ளார்.

மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் 17 பேர் கொண்ட பாடத்திட்ட மறு வடிவமைப்புக்கு குழு!

சென்னை, ஜூன் 30- தமிழகத்தில் பள்ளிப் பாடத்திட்டங்களை மறுவடி வமைப்பு செய்வதற்காக, இஸ்ரோ திட்ட முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் 17 உறுப்பினர்களைக் கொண்ட புதிய குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. பேராசிரியர் த.வி.வெங்கடேஸ்வரன், ரீட்டா ஜான், எம்.சுதந்திரமுத்து, என்.மதிவாணன், டி.அசோகன், எஸ்.ஏஞ்சல் ரத்னாபாய், உமா ராமன், பி.மகாவீர், ஓவியர் மணியம் செல்வன், கே.ராஜன், ஆர்.சந்தன தேவன், எம்.செல்வம், எஸ்.திலீப், கே.எஸ்.டி. ஆனந்த் அஜித் மகியா ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். நான்காம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை யிலான பள்ளிப் பாடங்களை, தற்போதைய கல்வித் தேவைகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை இந்தக் குழு அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

நெல்லையில் 3 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!

மதுரை, ஜூன் 30 - திருநெல்வேலி மாவட்டத்தில் மூன்று சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்ற வாளிக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலப்பாளையத்தில் மூன்று சிறுமிகளை கொலை செய்து விடுவதாக மிரட்டி, ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆனந்தசேகர் என்பவ ருக்கு திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம், தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை உறுதி செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது, விசாரணை நடத்திய நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு ஜூன் 30 அன்று அளித்த தீர்ப்பில், இதுபோன்ற கொடூரமான குற்றங்களுக்கு இரக்கம் காட்டுவது தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும். குழந்தை களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மலிவாகக் கருதி, குற்றவாளி ஆயுள் முழுவதும் சிறையில் இருப்பதை மட்டும் இந்த நீதிமன்றம் போதுமான தண்டனையாக கருதவில்லை. குழந்தைகளைப் பாது காப்பதில் சட்டம் உறுதியான முதுகெலும்பாக செயல்பட வேண்டும். இந்தத் தீர்ப்பு சமூகத்திற்கு ஒரு எச்சரிக்கையாகவும், நீதி வழங்குவதோடு சமூக ஒழுக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் அமைய வேண்டும்” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். தொடர்ந்து, ஆனந்தசேகருக்கு திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் விதித்திருந்த தூக்குத் தண்டனையை உறுதி செய்தும் நீதிபதிகள் உத்தர விட்டனர்.

செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு அமலாக்கத் துறைக்கு அனுமதி தருமாறு ஆளுநரிடம் தமிழக அரசு வலியுறுத்தல்!

சென்னை, ஜூன் 30 - பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர்கள் வி. செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடர அம லாக்கத்துறை அனுமதி கோரியுள்ளது. இந்நிலையில், அம லாக்கத்துறையின் கோரிக்கை தொடர்பான கோப்புகளை விரைந்து பரிசீலித்து ஒப்புதல் வழங்குமாறு தமிழக அரசு ஆளுநர் அர்லே கரிடம் வலியுறுத்தி யுள்ளது. இதுதொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆளுநரை நேரில் சந்தித்து அரசின் நிலைப் பாட்டை எடுத்துரைத்த தாகத் தகவல்கள் தெரி விக்கின்றன. முன்னதாக, செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர அனுமதி கோரி ஜூன் மாத முதல் வாரத் திலேயே தமிழக அரசு ஆளுநருக்குக் கோப்பு களை அனுப்பியிருந் தது. ஆனால் இதுவரை அதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. அதேபோல, வருமா னத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக் கில் அனிதா ராதா கிருஷ்ணன் மீதும் அம லாக்கத்துறை பண மோசடி விசாரணையை முன்னெடுத்துள்ளது. இரு வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் உள்ளிட்ட அடுத்தகட்ட நடவ டிக்கை களுக்காகத் தேவையான அனு மதியை பெறும் முயற்சி யில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது. கோப்புகள் அனுப்பப் பட்டு 20 நாட்களுக்கும் மேலாகியும் ஒப்புதல் கிடைக்காததால், அவற்றை விரைந்து பரி சீலித்து முடிவெடுக்கு மாறு தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தி யுள்ளது.