தீக்கதிர் முக்கிய செய்திகள்
13 Jun 2026, 11:14 pm

‘ஆணவக் கொலைகளைத் தடுக்கக் கடுமையான சட்டம் அவசியம்!’

சென்னை: தூத்துக்குடியில் நடைபெற்ற ஆணவக் கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பாராட்டியுள்ளார். ஆணவக் கொலை என்பது வர்ணாஸ்ரம பண்பாட்டின் தீய விளைவு என்றும், இதனைத் தடுக்கச் சட்டப்பூர்வமான கடுமையான தண்டனைகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நீதிமன்றத் தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டவாறு, கடந்த 10 ஆண்டுகளில் 59 ஆணவக் கொலைகள் நடந்துள்ளதை அவர் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார். கடந்த திமுக அரசு ஆணவக் கொலைகளைத் தடுக்கவும், சாதி வெறிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பணி களை விரைவுபடுத்த வேண்டும். பள்ளி மாணவர்களி டையே சாதிய அடையாளங்களை ஒழிக்க அரசு எடுக்கும் நட வடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. நீதிபதியின் இத்தீர்ப்பு, சட்டம் என்ற இருட்டறையில் சமூக நல்வாழ்விற்கான கலங்கரை விளக்கமாக அமையும் என அறிக்கையில் அவர் தெரி வித்துள்ளார்.

தவெக அரசின் தோல்விகளை தொடர்ந்து சுட்டிக் காட்டுவோம்!

மு.க.ஸ்டாலின் விமர்சனம் சென்னை: தமிழக வெற்றிக் கழக அரசின் தோல்விகளை தொடர்ந்து சுட்டிக் காட்டுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவா லயத்தில் நடந்த திமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தவெக ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெண்ணுக்கே பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. பாலியல் வன்முறை, அரிவாள் வெட்டு, பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற சம்பவங் களை மவுனமாகப் பார்த்திருக்க முடியாது. தவெக ஆட்சிக்கு வாக்களித்ததற்கு இப்போது மக்களே வருந்துகின்றனர். அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள். முதலமைச்சர் விஜய் தனது ஆட்சியின் மீதே நம்பிக்கை இல்லாமல் தோல்வியுற்ற அதிமுக எம்எல்ஏக்களை இழுக்க முயற்சிக்கிறார். நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண் டதை ஈடி வழக்கில் இருந்து தப்பிக்கவே சென்றதாக வர்ணித் தார் விஜய். பாஜகவை உறுதியாக விமர்சிக்காமல், அமைதி யாக இருக்கிறார். இது சினிமா அல்ல, ஆட்சி நிர்வாகம் என்பதை விஜய் உணர வேண்டும் என ஸ்டாலின் விமர்சித்தார்.

பா.ஜ.க-வில் இருந்து த.வெ.கவுக்கு தாவிய விஜயதாரணி

சென்னை: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜய தாரணி பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி சனிக்கிழமை (ஜூன் 13) தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தமிழ்நாடு மகிளா காங்கிரஸின் முன்னாள் தலைவரான விஜயதாரணி மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர். தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த பிறகு 2024 இல் பா.ஜ.க-வில் இணைந்திருந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விளவங்கோடு தொகுதி யில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மேலும், அதிமுக வட சென்னை வடக்கு மாவட்டச் செயலா ளர் பாலகங்கா, அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சமால், முன்னாள் எம்.பி.க்கள் வனரோஜா, இளவரசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி உள்ளிட்ட பலரும் தவெகவில் இணைந்தனர்.

சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து

சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து செங்கல் பட்டை நோக்கிச் சென்ற சரக்கு ரயில் தாம்பரம் ரயில் நிலை யம் அருகே திடீரென தடம்புரண்டது. ஜல்லிக்கற்கள் நிரப்பப் பட்ட 16 பெட்டிகளை டீசல் என்ஜின் இழுத்துச் சென்றது இந்த ரயில். தடம்புரண்ட தருணத்திலேயே சுதாரித்துக் கொண்ட லோகோ பைலட் ரயிலை உடனடியாக நிறுத்திவிட்டு அதிகாரி களுக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த ரயில்வே மீட்புக் குழுவினர் முதலில் 16 சரக்குப் பெட்டிகளையும் என்ஜினில் இருந்து கழற்றி பாது காப்பாக பின்நோக்கி இழுத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து என்ஜினை மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தால் எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில் சேவைகளில் எந்தப் பாதிப்பும் ஏற்பட வில்லை என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.