தீக்கதிர் முக்கிய செய்திகள்
27 May 2026, 10:07 pm

இன்று பக்ரீத் கொண்டாட்டம் முதலமைச்சர் விஜய், மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தியாகத் திருநாளான பக்ரீத் பெருவிழா இன்று (மே 28) உலகம் முழுவதும் இஸ்லாமியப் பெருமக்களால் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு முதல மைச்சர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ள பக்ரீத் வாழ்த்துப்பதிவில், “ஈகைத் திருநாளாம் பக்ரீத் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தன்னுடைய வாழ்த்துச் செய்தியில், “ஈகைப் பண்போடு ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை வாழ்வறமாகக் கொண்டு வாழும் இஸ்லாமியப் பெருமக்க ளின் வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைபெற வேண்டும்” என தெரிவித்தார்.

தமிழகத்தில் 4 தொகுதிகள் காலியானது தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலகம் அறிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் 4 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலகம், தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், அரசியலமைப்புச் சட்டப்படி திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இதனால் அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே எஸ்.பி. வேலுமணி அணியைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏ-க்களான சத்யபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல் ஆகிய மூவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் கடிதம் அளித்தனர். தொடர்ந்து அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையாவும் ராஜினாமா கடிதம் அளித்தார். நான்கு பேரின் ராஜினாமாவும் சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது. ராஜி னாமா செய்த நான்கு எம்எல்ஏ-க்களும் தவெகவில் இணைந்து கொண்டனர். இதன் விளைவாக தாராபுரம், பெருந்துறை, மதுராந்த கம், அம்பாசமுத்திரம் ஆகிய நான்கு தொகுதிகளிலும் விரை வில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. திருச்சி கிழக்குத் தொகுதி தொடர்பான அறிக்கை ஏற்கனவே அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

செஸ் வீராங்கனைக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

சென்னை: தமிழ்நாடு செஸ் வீராங்கனை வைஷாலி சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்காக, தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ், அவருக்கு ரூ. 10 லட்சத்திற்கான காசோ லையை பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இந்நிகழ்வு நடைபெற்றது.

வீடுகள் ஒதுக்கீட்டில் சாதி பாகுபாடு: மா. சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சுப்புபிள்ளை தோட்டத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ. 11 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்ட சுமார் 2,700 குடியிருப்புகள் கடந்த மார்ச் மாதம் அன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டன. தேர்தல் அறிவிப்பால் வீடு ஒதுக்கீடு பணிகள் தடைபட்டன. புதிய ஆட்சி அமைந்த நிலையில் இந்த வீட்டு ஒதுக் கீட்டில் சாதிப் பாகுபாடு காட்டப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந் துள்ளது. சைதாப்பேட்டை தவெக எம்எல்ஏ அருள் பிரகா சம் வழியாக, பட்டியலின மக்கள் குடியிருக்கும் பிளாக்கு களில் தங்களுக்கு வீடு வேண்டாம் என்று வலியுறுத்தி, குறிப்பிட்ட சமூகத்தினருக்கென தனியாக பிளாக் ஒதுக்கீடு கோரும் முயற்சிகள் நடப்பதாக குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். இவை சாதிவாதிகளின் நவீன தீண்டாமை என்று அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.