தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் மாநில மாநாட்டில் தீர்மானம்

4 Oct 2026, 11:04 pm
நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை  அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் மாநில மாநாட்டில் தீர்மானம்

நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்

மாநில மாநாட்டில் தீர்மானம்

மறைமலைநகர், அக்.4 -நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து, அரசு கருவூலம் மூலம் ஊதியமும்ஓய்வூதியமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் மாநில மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் சங்கத்தின் 10-வது மாநாடு, மாநிலத் தலைவர் கா. முருகானந்தம் தலைமையில் அக்டோபர் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

மாநாட்டு நிகழ்வுகள்

மாநிலத் துணைத் தலைவர் சு. செந்தில்குமார் செழியன் அஞ்சலித் தீர்மானத்தை வாசித்தார்; வரவேற்புக் குழுத் தலைவர் கே. கார்த்திகேயன் வரவேற்புரை ஆற்றினார். சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். கண்ணன் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மு. தாமோதரன் வேலை அறிக்கையையும், மாநிலப் பொருளாளர் இரா. சுவாமிநாதன் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.

மாநாட்டை வாழ்த்தி தமிழ்நாடு துப்புரவு ஆய்வாளர் சங்க மாநிலத் தலைவர் வே. சுப்பையா, மாநில ஒருங்கிணைப்பாளர் சௌ. அல்லா பிச்சை, நகர அமைப்பு அலுவலர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.

கண்ணதாசன், ஓட்டுநர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர். மோகன், எல்லை விரிவாக்க ஊழியர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ஆர். சத்தியமூர்த்தி, பேரூராட்சி ஊழியர்கள் சங்கப்பொதுச் செயலாளர் மகாலிங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க செங்கல்பட்டு மாவட்டத் தலைவர்டாக்டர் சுரேஷ் குமார், கருவூலக் கணக்குத்துறை அலுவலர் சங்கப் பொதுச் செயலாளர் லெனின், ஆணையர் அல்லாத அனைத்து ஊழியர் சங்கத் தலைவர் கலைவாணன், சத்துணவு ஓய்வூதியர் சங்கப் பொதுச் செயலாளர் பி. இராமமூர்த்தி, ஓய்வுபெற்ற ஊழியர் சங்கத் தலைவர் ராமமூர்த்தி, சென்னை மாநகராட்சி ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் வை. சிவகுமார், வரவேற்புக் குழு கௌரவத் தலைவர் நா. இளங்கோ உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள்

நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து, அரசு கருவூலம் மூலம் ஊதியமும் ஓய்வூதியமும் வழங்க வேண்டும்.

1996 அக்டோபர் 1-க்கு முன் பணியில் சேர்ந்த தினக்கூலிப் பணியாளர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்சம் மூன்று கட்டப் பதவி உயர்வுகள் வழங்க வேண்டும்.காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பி, தேவைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

அலுவலக நேரத்தைத் தாண்டி சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் ஆய்வுக் கூட்டங்

கள் நடத்துவதைக் கைவிட வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.