தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சுதேசி வணிகத்தைக் காக்க நடவடிக்கை தேவை முதல்வருக்கு வணிகர் சங்கப் பேரவை கோரிக்கை

13 May 2026, 1:52 am
சுதேசி வணிகத்தைக் காக்க நடவடிக்கை தேவை முதல்வருக்கு வணிகர் சங்கப் பேரவை கோரிக்கை
<p><strong>சுதேசி வணிகத்தைக் காக்க நடவடிக்கை தேவை முதல்வருக்கு வணிகர் சங்கப் பேரவை கோரிக்கை</strong></p><p>சென்னை, மே 12- தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, சுதேசி வணிகத்தைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பேரவை தலைவர் எஸ்.சவுந்தர்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகியுள்ள அவருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், ஆன்லைன் மற்றும் கார்ப்பரேட் வர்த்தக மோகத்தால் சிறு வணிகம் அழிந்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், இதனைத் தடுக்க விழிப்புணர்வு குறும்படங்களை அரசு வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல், போதை கலாச்சாரத்தை ஒழித்தல் மற்றும் சிறு குறு வணிகர்களுக்கு வங்கிகளில் பிணைய மில்லாக் கடன் வழங்க உத்தரவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் அவர் முன்வைத்துள்ளார். புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி வேலை யில்லா திண்டாட்டத்தைப் போக்க இந்த அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.