தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு துவங்கியது

1 hour before
எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு துவங்கியது
<p><strong>எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு துவங்கியது</strong></p><p>சென்னை, ஜூன் 29 - தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, திங்களன்று (ஜூன் 29) தொடங்கியது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி களில் சேர விரும்பும் மாணவர்கள் திங்கட்கிழமை முதல் www.tnmedicalselection.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய குறைந்தது ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என்று மருத்துவ கல்வி இயக்கு நரகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் பதற்ற மின்றி விண்ணப்பிக்கலாம் என்றும் இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. விண்ணப்பிக்கும் முன்பு, நீட் ஹால் டிக்கெட், பத்து, பதினொன்று மற்றும் பன்னி ரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ், இருப்பிடச் சான்றி தழ் மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகிய ஆவணங் களின் தெளிவான ஸ்கேன் பிரதிகளை தயாராக வைத்திருக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சத விகித இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்ப வர்களுக்கு ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்றதற் கான தகவல்கள் இஎம்ஐஎஸ் (EMIS) எண் மூலம் சரிபார்க்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பன்னி ரண்டாம் வகுப்பு முடித்தவர்களும் EMIS எண் இல்லாதவர்களும் முதன்மைக் கல்வி அலுவ லரின் சான்றொப்பம் பெற்ற சான்றிதழை பதி வேற்ற வேண்டும். விண்ணப்பிக்கும்போது முதலில் இணைய தளத்தில் செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கொடுத்து புதிய கணக்கை உருவாக்கி, தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகவல்கள், நீட் ஹால் டிக்கெட் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பக் கட்ட ணத்தை ஆன்லைனில் செலுத்திவிட்டு, சான்றி தழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதி சமர்ப்பிப்பிற்கு முன் அனைத்து விவரங்களையும் இருமுறை சரிபார்க்க வும், விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து நகல் எடுத்து வைக்கவும் வலியுறுத்தப் பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.