சுமைப்பணி தொழிலாளர்களுக்குத் தனிச்சட்டம், தனி நலவாரியம் அமைக்க வேண்டும் வெள்ளி விழா மாநாட்டில் வலியுறுத்தல்
4 Oct 2026, 10:55 pm

சுமைப்பணி தொழிலாளர்களுக்குத் தனிச்சட்டம், தனி நலவாரியம் அமைக்க வேண்டும்

வெள்ளி விழா மாநாட்டில் வலியுறுத்தல்

சேலம், அக்.4 -தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனத்தின் (சிஐடியு) 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மாநாடு, சேலத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. மாவட்ட அளவிலான சங்கங்களை ஒன்றிணைத்து மாநில அளவில் செயல்பட்டு வரும் இந்தச் சம்மேளனம் அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இம்மாநாடுநடத்தப்பட்டது.

மாநாட்டு நிகழ்வுகள்

மாநில தலைவர் ஆர். வெங்கடபதி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், சிறப்புத் தலைவர் எஸ். குணசேகரன் கொடியேற்றி வைத்தார்; சிஐடியு மாநில செயலாளர் கே.சி. கோபிகுமார் கண்காட்சியை திறந்து வைத்தார்; வரவேற்புக் குழுத் தலைவர் ஏ. கோவிந்தன் வரவேற்புரை ஆற்றினார். சிஐடியு அகில இந்தியத் துணைத் தலைவர் ஏ.கே. பத்மநாபன் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினார். சம்மேளன பொதுச் செயலாளர் ஆர். அருள்குமார் விருது வழங்கும் நிகழ்ச்சியைஒருங்கிணைத்தார்; ‘சுமை சுவடுகள்’ சிறப்பு மலரை வெளியிட்டு சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் கே. சந்திரன்சிறப்புரையாற்றினார். சம்மேளன முன்னாள் நிர்வாகிகளுக்குப் பாராட்டு விழாவும் நடைபெற்றது.மாநாட்டில் மாநில துணைத் தலைவர் டி. உதயகுமார், சம்மேளனபொருளாளர் பி. குமார், சாலைப்போக்குவரத்து மாநில துணைத் தலைவர் எஸ்.கே. தியாகராஜன், இந்திய உருக்குத் தொழிலாளர் சம்மேளன அகில இந்தியத் துணைத் தலைவர் பி. பன்னீர்செல்வம், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் வி. இளங்கோ, சாலைப்போக்குவரத்து மோட்டார் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி. முருகேசன், அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க சேலம் மண்டலப் பொதுச் செயலாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டசெயலாளர் சி. கருப்பண்ணன், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டசெயலாளர் சி. உதயகுமார், சுமை சங்கத் தலைவர் பி. ஆறுமுகம், பொருளாளர் கே. மாயக்கண்ணன், சம்மேளனத் துணைத்தலைவர்கள், துணைச் செய லாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

செப்டம்பர் 20 ‘சுமைப்பணி தினம்’

விவசாயப் பொருட்கள் முதல் தொழிற்சாலை உற்பத்திப் பொருட்கள் வரை நுகர்வோரைச் சென்றடையும் ஒவ்வொரு கட்டத்திலும் சுமைப்பணிதொழிலாளர்களின் உழைப்பு இணைந்துள் ளது. சந்தைகள், கிடங்குகள், ரயில்வே குட்செட்கள், துறை முகங்கள், நெல்கொள்முதல் நிலையங்கள், ஆலை, டாஸ்மாக் கிடங்குகள், சரக்கு வாகனங் கள், டெலிவரி பணிகள் எனச் சரக்குப் பரிமாற்றம் நடைபெறும் அனைத்துத் தளங்களிலும் அவர்கள் முக்கியப் பங்காற்றினாலும், உழைப்புக்கு உரிய அங்கீகாரம், வேலைப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, சட்டப்படியான உரிமைகள் முழுமையாக உறுதி செய்யப்படாத நிலை தொடர்கிறது. எனவே, இத்தொழிலின் சமூக, பொருளாதார முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்ல, செப்டம்பர் 20-ஐ ஆண்டுதோறும் ‘சுமைப்பணி தினமாக’க் கடைப்பிடிக்கத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.‘இயற்கையை நேசிப்போம், அறிவியலை வளர்ப்போம், உழைப்பை மதிப்போம், உழைப்பாளிகளின் உரிமையைப் பாதுகாப்போம், சமூக ஒற்றுமையை வளர்ப்போம்’ என்ற கருத்துகளை முன்வைத்து, மாநிலம் முழுவதும் விழிப்புணர்வுநிகழ்ச்சிகள், தொழிலாளர் சந்திப்புகள், கருத்தரங்குகள், மருத்துவ முகாம்கள், விளையாட்டுப் போட்டிகள், சமூகப் பணிகளை நடத்தவும் மாநாடு முடிவு செய்தது. புதிய தலைமுறைத் தொழி லாளர்களை அமைப்புடன் இணைக்கவும் இத்தினம் உதவும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

‘தனிச் சட்டம், தனி நலவாரியம் வேண்டும்’ — அ. சவுந்தரராசன்

மாநாட்டை நிறைவு செய்த சிஐடியு அகில இந்தியத் துணைத் தலைவர் அ. சவுந்தரராசன் செய்தி

யாளர்களிடம் பேசுகையில், சுமைப்பணி தொழிலாளர்களின் வேலை நிலைமைகள், பணிப் பாதுகாப்பு, வேலைத் தொடர்ச்சியை உறுதி செய்யும்வகையில் தமிழக அரசு தனிச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் எனக் கோரினார். ஆலைத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படு வது போல், இவர்களுக்கும் உணவகம், கழிப்பறை வசதி, ஓய்வறைகள் அமைத்துத் தர வேண்டும் என்றார். இத்தொழிலின் தன்மையும் பிரச்சனைகளும் முற்றிலும் வேறுபட்ட வை என்பதால், தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும் எனவும், பெண் தொழிலாளர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, விபத்து, உயிரிழப்பு, குடும்ப சுபநிகழ்ச்சி களுக்கு உரிய நிதியுதவி அளிக்கும்வகையில் நலவாரியத் திட்டங்கள் அமைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். பல ஆண்டுகள் பணிபுரிந்ததொழிலாளர்களைத் திடீரென வேலையிலிருந்து நீக்குவது ஏற்கத்தக்கதல்ல எனவும், பணித் தொடர்ச்சியைஅரசும்மாவட்ட நிர்வாகங்களும் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.வரவேற்புக் குழுச் செயலாளர் பி. சக்திவேல் நன்றியுரை ஆற்றி னார்.