தீக்கதிர் முக்கிய செய்திகள்
25 May 2026, 9:39 pm

தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் மேகதாது திட்டம் கனிமொழி எம்.பி., கருத்து

சென்னை: மேகதாது அணை கட்டுவதை எதிர்க்க தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்த தற்கும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “மேற்கு மண்டலம் தொடங்கி தஞ்சை டெல்டா வரையி லான தமிழகத்தின் பாதியை பாலைவன மாக்கத் துடிக்கும் கர்நாடக அரசின் திட்டத்தை திமுக ஆட்சிக் காலத்தில் தடுத்து நிறுத்தியதாக குறிப்பிட் டார். தற்போது தவெக அமைச்சரவையில் காங்கி ரஸ் அமைச்சர்கள் பங்கு கொண்டிருக்கும் நிலையில், காவிரிப் பிரச்சனையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலையிட்டு அத்திட்டத்தை தடுத்து நிறுத்தும் என நம்புவதாக” அவர் தெரிவித் தார்.

15 நாட்களில் 25 கொலைகள்: பேசுபொருளாகும் சட்டம்-ஒழுங்கு

சென்னை: முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று 15 நாட்கள் கடந்த நிலையில் தமிழகத்தில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள் மற்றும் பல பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்றிருப்பதாக விவரங்கள் தெரிவிக் கின்றன. கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, 17 வயது சிறு வன் வெட்டிக் கொலை ஆகிய சம்பவங்கள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விகளை பெரிதாக எழுப்பியுள்ளன. முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்றவுடன் கையெழுத் திட்ட முதல் மூன்று கையெழுத்துகளிலேயே பெண்களின் பாதுகாப்பும் போதைப்பொருள் தடுப்பும் இடம்பெற்றிருந் தன. அவரது அறிவுறுத்தலின்படி பெண்களின் பாதுகாப்பிற் காக சிறப்பாக உருவாக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ அதிரடிப் படை யின் பயன்பாடு குறித்தும் இப்போது கேள்விகள் எழுகின்றன. இந்தப் பின்னணியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்து முதலமைச்சர் திங்களன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். தலைமைச் செயலாளர், உள்துறை செயலா ளர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்ற இக் கூட்டத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற எதிர் பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் பாலியல் குற்றங் கள், கொலை சம்பவங்களை மேற்கோள்காட்டி, முதல்வர் விஜய் உடனடியாக சட்டம் ஒழுங்கை சீர்செய்ய வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலி யுறுத்தியுள்ளார்.

முதல்வர் என்ன செய்யப் போகிறார்? எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி

சென்னை: தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் 25 கொலை கள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் நடை பெற்றிருக்கும் நிலையில், சட்டம்-ஒழுங்கு சீரழிவு குறித்து முதலமைச்சர் நேரடியாக பதிலளிக்க வேண்டும் என சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலி யுறுத்தியுள்ளார். கோவை சூலூர் சிறுமி வழக்கில் தாயிடம் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டது, விழுப்புரத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் படுகொலை, கோவை யில் இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, முதல மைச்சரின் சொந்தத் தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் 13 வாகனங்களை சேதப்படுத்தியது என தொடர் சம்ப வங்களை அவர் பட்டியலிட்டார். காவல்துறை அதிகாரிகள் கூட்டம் நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது என்று கூறிய உதயநிதி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங் களை தடுக்க முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார். தேர்தலுக்கு முன்பு வீரவச னங்கள் பேசிய முதலமைச்சர் இப்போது வாய் திறக்க மறுப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.