தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

முதலீடுகளை ஈர்க்க உரிய சூழல் அவசியம்: இந்திய தொழில் முனைவோர் சங்கம் கருத்து

16 May 2026, 2:14 am
முதலீடுகளை ஈர்க்க உரிய சூழல் அவசியம்:  இந்திய தொழில் முனைவோர் சங்கம் கருத்து

முதலீடுகளை ஈர்க்க உரிய சூழல் அவசியம்: இந்திய தொழில் முனைவோர் சங்கம் கருத்து

சென்னை, மே 15- முதலீடுகளை ஈர்க்க நிர்வாகத் தொடர்ச்சியும் நிலைத்தன்மையும் மிகவும் அவசியம் என்று இந்திய தொழில் முனைவோர் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தேசிய தலைவர் கே.இ.ரகுநாதன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், புதிதாக நியமிக்கப்பட உள்ள தொழில்துறை அமைச்சருடன் சேர்த்து, தொழில்துறை செயலாளர் மற்றும் வழிகாட்டுதல் பணி யகத்தின் தலைமை அதிகாரி ஆகியோ ரையும் ஒரே நேரத்தில் திடீரென மாற்றி யிருப்பது தொழில் வட்டாரங்களில் மிகுந்த அதிர்ச்சியையும் கவலை யையும் ஏற்படுத்தியுள்ளது.

இது தேவையற்றதுடன், தற்போதைய சூழலுக்குப் பொருத்தமற்ற முடிவாக வும் பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே ரூ.12.5 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் முதலீட்டு உறுதி ப்பாடுகள் பல்வேறு கட்டங்களில் நடை முறைக்கு வரக் காத்திருக்கின்றன.

மேலும், பல புதிய மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் முதலீடுகளை ஈர்க்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நிர்வாகத் தொடர்ச் சியும் நிலைத்தன்மையும் மிகவும் அவசியமானவை.

சிறுபான்மை அரசு என்ற அரசியல் சூழ்நிலையால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை ஏற்கெனவே சவாலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அண்டை மாநிலங்களின் கடுமையான முத லீட்டுப் போட்டியையும் கருத்தில் கொண்டால், தொழில் மற்றும் முதலீட்டுத் துறையைக் கையாளும் முழு தலைமை அமைப்பையும் ஒரே நேரத்தில் மாற்றுவது உள்நாட்டு மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களுக்குத் தவறான சிக்னலை ஏற்படுத்தக்கூடும்.

முன்னாள் அதிகாரிகளான அருண் ராய் மற்றும் டாக்டர் டாரெஸ் ஆகி யோர், துறையின் மீது கொண்ட ஆழ்ந்த புரிதல், நேரடி ஈடுபாடு, எளிதில் அணுக க்கூடிய தன்மை மற்றும் தொழில்துறை யினருடன் தொடர்ந்து வைத்திருந்த உறவு ஆகியவற்றின் மூலம் முதலீட்டா ளர்களிடையே மிகுந்த நன்மதிப்பைப் பெற்றிருந்தனர்.

அவர்களின் அர்ப்ப ணிப்பும் முனைப்பும் தமிழ்நாட்டின் முத லீட்டுச் சூழலுக்கு நம்பிக்கையையும் வேகத்தையும் உருவாக்கியது.

தொழில் வளர்ச்சியும் முதலீட்டு ஊக்குவிப்பும் தொடர்ச்சி, நம்பிக்கை மற்றும் நீண்டகால உறவுகளை அடிப்படையாகக் கொண்டவை.

உயர்மட்டத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் முடிவெடுப்பதைத் தாமதப்படுத்தவும், திட்டங்களின் செயல்பாட்டைப் பாதிக்கவும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் குறைக்கவும் வழிவகுக்கும் அபாயம் உள்ளது.

இந்த முடிவு மாநிலத்தின் முதலீடு கள், வேலைவாய்ப்புகள் மற்றும் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு பாதகமாக அமையக்கூடும்.

தமிழ்நாட்டின் கடின உழைப்பால் உருவாக்கப்பட்ட தொழில்துறை நற்பெயரைப் பாதுகாக்கும் வகையில், அரசு உடனடியாக முதலீட்டாளர் களுக்கு நம்பிக்கை அளித்து, கொள்கை மற்றும் நிர்வாகத் தொடர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.