தொழிற்பயிற்சி அலுவலர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
3 Jul 2026, 1:11 am
<p><strong>தொழிற்பயிற்சி அலுவலர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு</strong></p><p> செங்கல்பட்டு, ஜூலை 2 – தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் 2026-27-ஆம் ஆண்டிற்கான புதிய மாநில நிர்வாகிகள் பதவியேற்பு விழா செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. தேர்தல் ஆணையர் மு.மோகன்தாஸ் முன்னிலையில், மாநிலத் தலைவராக எம்.சீனிவாசன், பொதுச்செயலாளராக என்.ரமேஷ், பொருளாளராக என்.திருநாவுக்கரசு உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர். விழாவில் அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.பாஸ்கரன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் விக்க்டர் சுரேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.</p>
