தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க, தனியார்மயத்தை முறியடிக்க கோரி ஜன.28 முதல் நெடும்பயணப் போராட்டம்

10 Oct 2026, 10:20 pm
நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க, தனியார்மயத்தை முறியடிக்க கோரி ஜன.28 முதல் நெடும்பயணப் போராட்டம்

நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க, தனியார்மயத்தை முறியடிக்க கோரி ஜன.28 முதல் நெடும்பயணப் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, அக்.10 -நெடுஞ்சாலைத் துறையில் தனியார்மயத்தை எதிர்த்து, மாநில நெடுஞ்சாலை ஆணையத்தைக் கலைக்கக் கோரி, வருகிற 2027 ஜனவரி 28 முதல் பிப்ரவரி 9 வரை தமிழகத்தின் மூன்று முனைகளிலிருந்து நீதி கேட்டு நெடும்பயணம், மக்கள் சந்திப்பு, இரு சக்கர வாகனப் பிரச்சார இயக்கம் நடத்தத் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில மாநாடு தீர்மானித்துள்ளது. திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற 10-வது மாநில மாநாட்டில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டு நிகழ்வுகள்மாநிலத் தலைவர் மா. பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், சங்கக் கொடியை அவரும், அரசு ஊழியர் சங்கக் கொடியை மு. செல்வராணியும், அகில இந்திய அரசு ஊழியர் சங்கக் கொடியை வெ. சோமசுந்தரமும் ஏற்றினர். துணைத் தலைவர் ச. மகேந்திரன் அஞ்சலித் தீர்மானத்தை வாசித்தார்;

வரவேற்புக் குழுத் தலைவர் கா. பால்பாண்டி வரவேற்றார்; மு. செல்வராணி தொடக்கவுரையாற்றினார். பொதுச் செயலாளர் ஆ. அம்சராஜ் வேலை அறிக்கையையும், பொருளாளர் இரா. தமிழ் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். தலைமைப் பொறியாளர் எஸ். ஜவகர் முத்துராஜா உள்ளிட்ட பொறியாளர்களும், சங்கத் தலைவர் ம. தங்கமுத்து உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

முக்கியத் தீர்மானங்கள்சாலைப் பணியாளர்களின் 41 மாதப் பணி நீக்கக் காலத்தைச் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும்; உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்; தொழில்நுட்பக் கல்வித்திறன் பெறாத ஊழியருக்கு ரூ.5200-20200 தர ஊதியமும் ரூ.1900 தரப்படியும் வழங்க வேண்டும்; ஊதியத்தில் 10% ஆபத்துப்படி, சீருடை சலவைப்படி, நிரந்தரப் பயணப்படி வழங்க வேண்டும்; நெடுஞ்சாலைத் துறையில் தனியார்மயத்தை அனுமதிக்கக் கூடாது; பராமரிப்புப் பணிகளை அரசே ஏற்று, கிராமப்புற இளைஞர்களுக்குப் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.

கட்டம் கட்டமான போராட்டம்; நிர்வாகிகள் தேர்வுஅக்.16 அன்று விளக்கக் கூட்டம், அக்.23 அன்று கோட்டப் பொறியாளர் அலுவலகங்கள் முன் கோரிக்கை முழக்க இயக்கம், நவ.12 அன்று கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகங்கள் முன் மௌனப் புரட்சி, டிச.16 அன்று தலைமைப் பொறியாளர் அலுவலகங்கள் முன் பணி புறக்கணிப்பு இயக்கம், ஜன.போது சென்னையில் உரிமை கோரும் இயக்கம் என கட்டம் கட்டமாகப் போராட்டங்கள் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.

புதிய நிர்வாகிகளாக மாநிலத் தலைவர் மா. பாலசுப்பிரமணியன், பொதுச் செயலாளர் ஆ. அம்சராஜ், பொருளாளர் இரா. தமிழ் உள்ளிட்ட 13 பேர் கொண்ட மாநில நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது. முன்னாள் மாநிலத் தலைவர் எஸ். கண்ணன் நிறைவுரையாற்ற, வரவேற்புக் குழுச் செயலாளர்ஆர். இளங்கோவன் நன்றி கூறினார். (நநி)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.