தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
3 Oct 2026, 10:46 pm

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

திருச்சிராப்பள்ளி: தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் பாலசுப்ர

மணியன் தலைமை வகித்தார். கோட்டத் தலைவர் ஜீவானந்தம் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ் வேலை அறிக்கையையும், மாநிலப் பொருளாளர் தமிழ் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.

கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி, சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தைப் பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும். இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்

முறையீட்டு மனுவை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பணிகளை அரசே

நேரடியாகச் செயல்படுத்த வேண்டும். கிராமப்புற இளைஞர்களைச் சாலைப் பணியாளர்களாகப் பணிநியமனம் செய்ய வேண்டும். பணியின் போது உயிர்நீத்த சாலைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் விரைந்து அரசுப் பணி வழங்க வேண்டும். தொழில்நுட்பக் கல்வித் திறன் பெறாதஊழியர்களுக்குரிய ஊதிய மாற்றமாக ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் (Grade Pay) ரூ.1,900 வழங்க வேண்டும்.

அக்.10 ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டுப் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர்கள் பழனிச்சாமி, ஹரிபாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர்கள் செந்தில்நாதன், மகாதேவன், திருப்பதிராஜா, பாஸ்கரன் உட்பட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநிலத் துணைத் தலைவர் மகேந்திரன் நன்றி கூறினார்.