தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மருத்துவர் அல்லாத மேற்பார்வை பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தல்: ஜூலை 16 இல் பணி புறக்கணிப்பு எச்சரிக்கை

14 Jun 2026, 1:51 am
மருத்துவர் அல்லாத மேற்பார்வை பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தல்: ஜூலை 16 இல் பணி புறக்கணிப்பு எச்சரிக்கை
<p><strong>மருத்துவர் அல்லாத மேற்பார்வை பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தல்: ஜூலை 16 இல் பணி புறக்கணிப்பு எச்சரிக்கை</strong></p><p>சேலம், ஜூன் 13- சுகாதாரத் துறையில் மருத்து வர் அல்லாத மேற்பார்வை பணியா ளர்களை உடனடியாக தமிழக அரசு நியமிக்க வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் அரசுக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. உடனடியாக தமி ழக அரசு பணியாளர்களை நிய மிக்காவிட்டால் ஜூலை 16 ஆம் தேதி இதரப் பணிகள் புறக்கணிக்கப்ப டும் என அறிவித்தனர். தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் கள் சங்க இணைப்பு விழா சேலம் திருவாக் கவுண்டனூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மாநிலத் தலைவர்கள் கங்காதரன், மணிவண்ணன் கருணாமூர்த்தி கூட்டு தலைமையில் சனியன்று நடைபெற்றது இக்கூட்டத்தில், தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் மருத்துவர் அல்லாத மேற்பார்வை பணியாளர் பணியிடங்கள் இல்லாததால் மருத்துவ பணியாளர்கள் கூடுத லாக பணியாற்றும் அவல நிலை தொடர்ந்து நடைபெற்று வருவதால் மிகுந்த மன உளைச்சலும் நேர விரையம் உள்ளது. இதனை கட்டுப் படுத்த தமிழக அரசு உடனடியாக கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். துறையால் வழங்கப்பட் டுள்ள செயலிகள் மற்றும் டேட்டாக் கள் கட்டமைப்பை புதிது படுத்த வேண்டும். செயலியை பயன்ப டுத்தி பணியாற்றுவதால் பணிச் சுமை ஏற்படுகிறது. இக்கோரிக்கை களுக்கு அரசு நிரந்தர தீர்வு காணாத பட்சத்தில் வரும் ஜூலை 16 ஆம் தேதி முதல் செயலியை பயன்ப டுத்த மாட்டோம் எனவும் மருத்து வர் அல்லாத மேற்பார்வை பணி களை புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். சுகாதாரத் துறையில் 11 ஆயிரத் திற்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வா ளர் பணியிடங்கள் தற்போது 3647 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 9000 மேற்பட்ட துணை சுகாதார மையங் கள் இருந்தும் தற்சமயம் பணியில் நூற்றுக்கும் குறைவான நிலை இரண்டு சுகாதார ஆய்வாளர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். எனவே உடனடியாக பணியாளர் களை நியமிக்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டனர். இதில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் குமார், பொரு ளாளர் செல்வம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க சேலம் மாவட்டச் செய லாளர் சுரேஷ் மற்றும் சுகாதார ஆய் வாளர்கள் சங்கத்தினர் பலர் பங் கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.