தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 1,800 பேர் மீதான வழக்குகள் வாபஸ்! தமிழக அரசு உத்தரவு

1 Nov 2026, 9:21 pm
நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட  1,800 பேர் மீதான வழக்குகள் வாபஸ்! தமிழக அரசு உத்தரவு

நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 1,800 பேர் மீதான வழக்குகள் வாபஸ்!

தமிழக அரசு உத்தரவு

சென்னை, நவ.1 -தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட 1,800 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 65 குற்ற வழக்குகளும் திரும்பப் பெறப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக கடந்த மே 10 முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை பல்வேறு காலக் கட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களில்ஈடுபட்ட சுமார் 1,800 பேர் மீது மாநிலம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் மொத்தம் 65 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவை பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளன. அவற்றின் தற்போதைய நிலை குறித்து முதல்வர் விஜய்யின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து முதல்வரின் அறிவுறுத்தலின்படி, இந்த வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்து கவனமுடன் பரிசீலனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் நீட் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட 1,800 பேர் மீது பதிவு செய்யப்பட்ட 65 குற்ற வழக்குகளையும் திரும்பப் பெறுவதற்குரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.