தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் நியமனம் வாபஸ்! கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது தமிழக அரசு

13 May 2026, 8:56 pm
ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் நியமனம் வாபஸ்! கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது தமிழக அரசு

ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் நியமனம் வாபஸ்! கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது தமிழக அரசு

சென்னை, மே 13 - முதலமைச்சர் ஜோசப் விஜய், தனக் கான அரசியல் பிரிவு அதிகாரியாக ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட்டை நியமித்து உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தரப்பி லிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.

“அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், அதற்கு மாறாக, ஒரு ஜோதிடரான ரிக்கி ரத்தன் பண்டிட்டை, அரசுச் செலவில் தனக்கான அதிகாரி யாக முதலமைச்சர் விஜய் நியமித்தி ருப்பதை ஏற்க முடியாது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகமும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக, திருவள்ளூர் மாவட்டம் கீழனூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர். ரதி என்பவர் முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ் நாடு அரசின் பொதுத்துறை செயலா ளருக்கு நோட்டீஸூம் அனுப்பினார்.

அதில், “முதலமைச்சராக விஜய் பதவியேற்கும்போது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிராக இந்த நியமனம் அமைந்துள்ளது” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் நியமனம் திரும்பப் பெறப்படுவதாக தமிழ்நாடு அரசு புதன்கிழமையன்று அறிவித்துள்ளது.

இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வரவேற்றுள்ளார்.

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்தும், தவறை உணர்ந்தும் ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் பணி நியமனத்தை அரசு திரும்பப் பெற்றுள்ளது.

விமர்சனங்கள், குறைகள் சுட்டிக்காட்டப்படும் போது அதை ஏற்றுச் சரிசெய்து கொள்வது என்ற அணுகுமுறை தொடர வேண்டும்.

அரசின் இந்த முடிவை வரவேற்கி றேன்” என்று தமது சமூகவலைதள பக்கத்தில் பெ. சண்முகம் குறிப் பிட்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.