முந்தய பக்கம்

அரசு அலுவலகங்களில் லஞ்சப் புகார்களுக்கு வாட்ஸ்அப் உதவி எண் அறிமுகம்!

15 Jul 2026, 11:21 am
அரசு அலுவலகங்களில் லஞ்சப் புகார்களுக்கு வாட்ஸ்அப் உதவி எண் அறிமுகம்!
<p>அரசு அலுவலகங்களில் லஞ்சம் கோரப்படுவது அல்லது பெறப்படுவது தொடர்பான புகார்களை பொதுமக்கள் எளிதாக தெரிவிக்கும் வகையில், 94981 80936 என்ற வாட்ஸ்அப் உதவி எண்ணை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>இந்த உதவி எண் குறித்த விவரத்தை அனைத்து அரசு துறைகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சாய் குமார் உத்தரவிட்டுள்ளார்.</p><p>லஞ்சம் தொடர்பான புகார்களை விரைவாகப் பெற்று நடவடிக்கை எடுப்பதற்கும், ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை வலுப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram