மாற்றுத் திறனாளி மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க தமிழக அரசுக்கு வேண்டுகோள்
7 Jun 2026, 10:48 pm

மாற்றுத் திறனாளி மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க தமிழக அரசுக்கு வேண்டுகோள்

சென்னை, ஜூன் 7- மாற்றுத் திறனாளி மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வேண்டு கோள் விடுத்துள்ளது.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத் தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென் னையில் மாநிலத் தலைவர் தோ. வில்சன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி, பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

. இக்கூட்டத்தில், மனவளர்ச்சி குன்றிய, அறிவுசார் குறைபாடு கொண்ட மாணவர்களை பள்ளி கல்லூரிகளில் சேர்க்கப்படுவதில் தொடங்கி தேர்வு எழுதும்வரை பல்வேறு பாகுபாடுகள் காட்டப்படுகின்றன.

வ்வொரு கல்வி யாண்டு தொடக்கத்திலும் இத்தகைய குழந்தைகளும் பாதுகாவலர்களும் கடும் மன உளைச்சலை எதிர்கொள் கிறார்கள்.

கல்வி உரிமைச் சட்டம் அருகாமை கல்வி நிலையங்களில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாற்றுத் திறன் மாண வர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், கல்விக் கட்டணம் மற்றும் தேர்வு கட்டணங்களில் விலக்களிக்கவும் வழிவகுத்துள்ளது.

ஆனால், பெரும் பாலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளில் இந்த உரிமைகளை வழங்க முன்வரு வதில்லை. அரசுப் பள்ளிகளில் குழந்தை கள் சேர்க்கப்பட்டாலும் வீடுகளில் பரா மரிக்கப்படும் நிலையே அநேக இடங் களில் காணப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகளின் உதவித் தொகை பெறுவதை காரணம் காட்டி, கல்வி உதவித்தொகை மறுக்கப்படு கிறது என்பதையும் அரசின் கவனத் திற்கு கொண்டு வருகிறோம். கல்லூரி களில் மாற்றுத் திறன் மாணவர்களுக்கு குறைதீர் அலுவலர் நியமிக்கப்பட வேண் டும் என மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016 தெரிவித்து உள்ளது.

ஆனால், அது நடை முறைக்கு வரவில்லை. எனவே, கல்வி உரிமைச் சட்டத்தை யும் மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டத்தையும் கல்வி வளாகங்களில் முழுமையாக அமல்படுத்த, தமிழக பள்ளிக்கல்வித் துறை மற்றும் உயர் கல்வித் துறை சார்பில் உடனே தலை யிட்டு மாற்றுத் திறனாளி மாணவர் களின் கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசை வலி யுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.