தேர்தல் வாக்குறுதியை தாமதமின்றி நிறைவேற்றி உரிமைத் தொகை ரூ. 2,500ஐ வரவு வைத்திடுக! தமிழக அரசுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை
14 May 2026, 9:39 pm

தேர்தல் வாக்குறுதியை தாமதமின்றி நிறைவேற்றி உரிமைத் தொகை ரூ. 2,500ஐ வரவு வைத்திடுக! தமிழக அரசுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை

சென்னை, மே 14 - மகளிர் உரிமைத் தொகை ரூ. 2 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை, தாமதமின்றி நிறைவேற்றி, மே மாதத்திற்கான ரூ. 2,500 மகளிர் உரிமைத்தொகையை பெண்களின் வங்கிக் கணக்குகளில் உடனடியாக வரவு வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி. பிரமிளா, பொதுச்செயலாளர் அ. ராதிகா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அதிருப்தியை ஏற்படுத்திய மறுசீரமைப்பு அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகம் சட்ட மன்றத் தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ. 2,500 உரிமைத்தொகை வழங்கப் கடும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.

இந்நிலையில், தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய், மகளிர் உரிமைத்தொகை வழங்குவ தற்காக “மறுசீரமைப்பு பணிகள்” மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று தெரிவித்திருப்பது பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதாரச் சுமையால் பாதிக்கப்படும் பெண்கள்

இன்றைய சூழலில் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு நெருக்கடி, குடும்பங்களின் பொருளாதார சுமை ஆகியவற்றால் பெண்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக எந்த வருமானமும் இல்லாத பெண்கள், கிராமப்புற பெண்கள், தனித்து வாழும் பெண்கள் உள்ளிட்டோருக்கு அரசின் உரிமைத்தொகையே தங்களின் அன்றாட வாழ்வில் சிறு நிவாரணமாக இருந்தது.

பெண்களின் வீட்டு வேலை களை, ஊதியமற்ற உழைப்பையும், சமூக ரீதியாக அங்கீகரித்து வழங்கப் படுகிற தற்போதைய உரிமைத் தொகை போதாது என அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம் பல்வேறு சமயங்களில் அரசிற்கு சுட்டிக்காட்டி உள்ளது.

நம்பிக்கையைச் சிதைக்கும் நடவடிக்கைகள் கூடாது

உரிமைத் தொகை என்பது வாழ்வாதாரப் பாதுகாப்புடன் தொடர்புடைய முக்கியமான திட்ட மாகும். இந்நிலையில் “மறு சீரமைப்பு” என்ற பெயரில் பெண்க ளின் சிறு பொருளாதார நம்பிக்கை யை சிதைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது.

தேர்தலின்போது அளிக்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை வாக்கு றுதி என்பது வெறும் தேர்தல் வாக்குறுதி அல்ல; பெண்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்பு டைய முக்கியமான சமூகப் பொறுப்பாகும். எனவே, “மறுசீர மைப்பு” என்ற பெயரில் உரிமைத் தொகை வழங்குவதை காலதாமதப் படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

உரிமைத் தொகையை உடனடியாக வரவு வைத்திடுக!

அரசிடம் ஏற்கெனவே குடும்ப அட்டை, ஆதார், வங்கிக் கணக்கு உள்ளிட்ட பல்வேறு தரவுகள் உள்ள நிலையில், உடனடியாக மகளிர் உரிமைத் தொகையை பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

மேலும், உரிமைத்தொகை வழங்குவதில் தேவையற்ற கட்டுப் பாடுகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்காமல், அனைத்து தகுதியான பெண்களுக்கும் பாரபட்சமின்றி உரிமைத்தொகை வழங்கப்பட வேண்டும்.

எனவே, தேர்தல் வாக்குறுதியை தாமதமின்றி நிறைவேற்றி, மே மாதத்திற்கான ரூ. 2500 மகளிர் உரிமைத்தொகையை பெண்களின் வங்கிக் கணக்குகளில் உடனடியாக வரவு வைக்க வேண்டும் என தமிழக அரசை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.