தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

98 கிராம மக்களை வெளியேற்றும் உச்சநீதிமன்ற உத்தரவு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்!

15 Jul 2026, 9:51 pm
98 கிராம மக்களை வெளியேற்றும் உச்சநீதிமன்ற உத்தரவு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்!

98 கிராம மக்களை வெளியேற்றும் உச்சநீதிமன்ற உத்தரவு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்!

சென்னை, ஜூலை 15 - களக்காடு முண்டந்துறை, மேக மலை உள்ளிட்ட பகுதி மக்களை வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற் கெதிராகத் தமிழ்நாடு அரசு உட னடியாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று முதல மைச்சர் சி. ஜோசப் விஜய்யிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. டில்லிபாபு, சிபிஎம் தேனி மாவட்டச் செயலாளர் எம்.பி. ராமச்சந்திரன், மாவட்டசெயற்குழு உறுப்பினர் ஜி.எம். நாகராஜன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் டி. கண்ணன் மற்றும் விவ சாயிகள் மு. தங்கமலை, ஆர். லிங்கம், மருதுபாண்டி ஆகியோர் புதனன்று (ஜூலை 15) தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பெ. சண்முகம் கூறியதாவது: களக்காடு முண்டந்துறை, ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலி கள் சரணாலயம், கன்னியாகுமரி மாவட்டம் உட்பட வனங்களில் வாழும் மக்களை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குள் வெளியேற்ற வேண்டும் என்று மே 29 அன்று உச்சநீதி மன்றம் ஒரு மோசமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அதில், சாதாரண மக்களை வெளியேற்றத் தமிழ்நாடு அரசு ஒத்துழைக்கவில்லை என்றால் மத்திய துணை ராணுவப்படை யைப் பயன்படுத்தக் கூறியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் வன உரிமைச் சட்டம்- 2006 முழுமையாக அமல் படுத்தப்படாமல் உள்ளது. இந்தச் சட்டம் வந்து 20 ஆண்டுகளாகிறது. திமுக, அதிமுக என இரு கட்சி களும் மாறி, மாறி ஆட்சி செய்துள் ளன. ஆனால், இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி இதுவரை 35 ஆயிரம் குடும்பங்களுக்குத்தான் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இரு கட்சி முதலமைச்சர்களிடமும் பல முறை இச்சட்ட அமலாக்கம் குறித்து மனு அளித்துள்ளோம். அவ்வப் போது சில மலைகளில் பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சட்டத்தால் பயனடைய வேண்டிய அனைவருக்கும் இன்னும் முழு மையாகப் பட்டா வழங்கப்பட

வில்லை. தேனி மாவட்டம் வருசநாடு, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதி களில் மட்டும் 98 கிராமங்களில் இருந்து மக்களை வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு ள்ளது. இதனால் மாவட்டம் முழு வதும் பெரும் பதற்றம் நிலவுகிறது.

எனவே, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்து, இத்தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும். வன உரிமைச் சட்டம் 2006-இன் படி, பழங்குடியினர் மற்றும் வனத்தைச் சார்ந்து வாழக் கூடியவர்கள் அனைவருக்கும் வன உரிமையையும் நில உரிமையையும் வழங்கக்கூடிய நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரினோம். பறைச்சேரி கிராமப் பெயர் மாற்றம் விருதுநகர் மாவட்டத்தில் ‘அச்சம் தவிர்த்தான்’ என்ற கிராமத்

தின் ஒரு பகுதியாக உள்ள மற் றொரு கிராமத்தின் பெயர் ‘பறச்சேரி’ என்றுள்ளது. இதனை ‘வடக்கு அச்சம் தவிர்த்தான்’ என்று பெயர் மாற்றக் கோரி அங்குள்ள மக்கள் கடந்த 15 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். கிராமப் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறை வேற்றி, ஆர்.டி.ஓ. (RDO), மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பரிந்துரை செய்தும் இன்னும் பெயர் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. வரு வாய் நிர்வாக ஆணையர் ஒரு உத்தரவிட்டால் இப்பெயர் மாறி விடும்; ஆனால் அதைச் செய்யா மல் இழுத்தடித்து வருகின்றனர்.

இந்தப் பெயரால் மக்கள் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர். எனவே, இப்பெயர் மாற்றத்தை உடனடி யாகச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். சூயஸ் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்க! முந்தைய ஆட்சியில் சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘சூயஸ்’ (Suez) நிறுவனத்திற்கு 25 வருட ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறு வனம் கடந்த 5 ஆண்டுகளாகக் கோவை மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது.

பொலிவியா உள்ளிட்ட நாடுகளில் மக்களால் அடித்து விரட்டப்பட்ட ஒரு தனியார் நிறுவனத்திற்குத் தண்ணீர் விநியோகம் செய்ய ஒப்பந்தம் கொடுத்துள்ளது எவ்வளவு பெரிய முரண்? குடிநீர் விநியோகம் என்பது எப்போதும் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். அதைத் தனி யாரிடம் ஒப்படைப்பதை எக்கார ணம் கொண்டும் ஏற்கவே முடியாது என்று முதலமைச்சரிடம் தெரி வித்தோம். இவற்றையெல்லாம் பொறுமை யுடன் கேட்டுக்கொண்ட முத லமைச்சர், அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தார். இவ்வாறு பெ. சண்முகம் கூறினார்.

இனாம் நிலப் பிரச்சனைக்குத் தீர்வு காணத் தனி ஆணையம் அமைக்க வேண்டும்!

கரூர் மாவட்டத்தில் 4 கிராமங்களில் உள்ள இனாம் நிலத்தைக் கோவில் நிலம் என்று தவறாகச் சித்தரித்து, கடந்த காலத்தில் பத்திரப் பதிவுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கர் இனாம் நிலங்கள் உள்ளன. அந்த நிலங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் நீண்ட காலமாக விவசாயம் செய்கின்றனர்; குடியிருக்கின்றனர்; வியாபாரம் செய்கின்றனர். ‘இனாம் நிலம்’ என்றாலே அது ‘கோவில் நிலம்’ என்ற தவறான புரிதலில் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற இந்துத்துவா அமைப்புகள் தவறான பிரச்சாரங்களைச் செய்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உத்தரவுகளைப் பெற்று, உழைக்கும் மக்களுக்குப் பெரும் இடையூறுகளைச் செய்து வருகின்றனர். தற்போதும் உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இத்தகையச் சூழலில், கரூர் மாவட்டத்தில் 4 கிராமங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கித் தமிழக அரசு கடந்த ஜூலை 9 அன்று புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்தத் துணிச்சலான நடவடிக்கையை நெஞ்சாரப் பாராட்டுகிறோம். அதேநேரம், தமிழகம் முழுவதும் இனாம் நிலத்தைப் பயன்படுத்தும் மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண உடனடியாகத் தனி ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம் என்றும் சண்முகம் தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.