மதம் மாறிய இஸ்லாமியர் இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும்!
58 minutes before

மதம் மாறிய இஸ்லாமியர் இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும்!

சென்னை, ஜூன் 27 - மதம் மாறிய இஸ்லாமியர் இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க, உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு, சிறுபான்மை மக்கள் நலக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலத் தலைவர் எஸ். நூர் முகமது, மாநிலப் பொதுச்செயலாளர் பி. செந்தில் குமார் ஆகியோர் அறிக்கை ஒன்றை விடுத்துள் ளனர். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மதம் மாறினால் எந்த உரிமையும் கிடையாதா?

மதம் மாறி இஸ்லாம் மதத்தை ஏற்பவர்கள் பிற்ப டுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட் டையோ, சாதி அடிப்படையிலான முஸ்லிம்கள் இட ஒதுக்கீட்டையோ கோர முடியாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், பி.பி. பாலாஜி அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அத்துடன் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட, பட்டியல் சாதிப் பகுதியில் இருந்து மதம் மாறு பவர்களுக்கு, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் சமூகச் சான்று வழங்கும் ‘2024-ஆம் ஆண்டின் அரசாணை எம்எஸ் நம்பர் 31’ அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவித்து, அந்த அரசாணையை ரத்து செய்துள்ளனர்.

3 மணி நேரத்தில் விசாரித்து தீர்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவரும், 2015 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறியவருமான சமீர் அகமது, தனக்கு இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சாதிச் சான்றிதழ் வழங்க கோரினார். கயத்தாறு வட்டாட் சியர் மறுத்த நிலையில் உயர் நீதிமன்றத்தை நாடி னார். இதனைப் பயன்படுத்தி, வழக்கறிஞர் வழக்கி லிருந்து விலகிய நிலையில், மனுதாரருக்கு அடிப்படை உரிமையான வழக்கறிஞர் நியமிக்கும் உரிமையைக் கூட வழங்காமல் புதிய நீதிபதியாக பி.பி. பாலாஜியை இணைத்துக் கொண்டு, 26-6-2026 மாலை 4 மணிக்கு வழக்கை எடுத்து இரவு 7 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

அரசாணை செல்லும் என்ற தீர்ப்பும் உள்ளது

முன்பு, இதேபோன்ற வழக்கு ஒன்றில், இரண்டு நீதிபதிகள் அமர்வு மேற்கண்ட அரசாணை அடிப்ப டையில் பணி வழங்கிட ஆணையிட்டிருந்த நிலை யில், அதற்கு மாறாக புதிதாக தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. யாருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், கல்வி - சமூகரீதியில் பின்தங்கியவர்கள் யார் என்ப தனை தீர்மானிக்கும் உரிமை அரசுகளுக்கு மட்டுமே உள்ளது. சமூக ரீதியாக பின்தங்கிய வரை அரசு தான் முடிவு செய்ய முடியும். அரசியலமைப்புச் சட்டம் பிரிவு-25 இன் படி, மதம் மாறுவது அடிப்படை உரிமையாகும். எனவே, மதம் மாறியவரை ‘இதர பிரிவினர்’ என்பது அந்த உரிமையை மறுப்பதாகும்.

நீதிமன்றத்தில் அலட்சியமாக நடந்துகொண்ட தமிழக அரசு

இந்த வழக்கில், அரசாணை ரத்து செய்யப்படும் என கடந்த ஜூன் 16 அன்றே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்த நிலையில் குறிப்பிட்ட கால அவகாசத்தை மாநில அரசு வழக்கறிஞர்கள் கேட்க முன்வரவில்லை. அரசின் முக்கிய வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகவில்லை. கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற முயற்சிக்கவில்லை. தமிழக அர சின் அலட்சியமான அணுகுமுறையே பிற்படுத்தப் பட்ட முஸ்லிம் என்கிற இட ஒதுக்கீடு வழங்கும் அர சாணை ரத்துசெய்ய காரணமாகி விட்டது.

எனவே, இடஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்திடவும், அவசரமான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்கவும் முன்வர வேண்டும். சிறுபான்மை நல னுக்கு எதிராக பெரும்பாலான வழக்குகள் ஒரு குறிப்பிட்ட நீதிபதியைக் கொண்ட அமர்வில் விசார ணைக்கு வருவதும், அவசர அவசரமாக விசாரித்து ஒருதலை பட்சமான உத்தரவுகள் பிறப்பிக்கப்படு வது குறித்தும் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கோருகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.