மாற்று பாலினத்தவருக்கான இடஒதுக்கீடு - தமிழக அரசுக்கு பதிலளிக்க உத்தரவு
16 Jul 2026, 4:40 pm

அரசு வேலைவாய்ப்பில் மாற்று பாலினத்தவருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படுமா என்பது குறித்து ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் பதலளிக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி மற்றும் அனைத்துப் பொதுத்துறை வேலைவாய்ப்புகளிலும் மாற்று பாலினத்தவருக்கு 1 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்குவது குறித்துப் பரிசீலிக்குமாறு, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2024-ஆம் ஆண்டும் ஜனவரி 9 அன்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், என்.செந்தில்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடகாவில் சீவில் சர்வீசஸ் மற்றும் அரசு வேலைவாய்ப்பில் மாற்று பாலினத்தவருக்கு ஒரு சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதே நடைமுறையை தமிழ்நாட்டிலும் வேண்டும் என கோரி மாற்று பாலினத்தவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை தொடர்ந்து, இது ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் பதலளிக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.