பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் அறிவிப்பு அரசுக்கு தமிழ்நாடு களரிப்பயட்டு சங்கம் நன்றி!
19 Aug 2026, 11:35 pm

பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் அறிவிப்பு அரசுக்கு தமிழ்நாடு களரிப்பயட்டு சங்கம் நன்றி!

உடுமலை. ஆக. 19-தமிழகத்தில் ரூ.42 கோடி செலவில் கிராமிய பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள்நடத்தப்படும் என அறிவித்த முதலமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு, ‘களரிப்பயட்டு அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு’ அமைப்பினர் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.இது குறித்து களரிப்பயட்டு அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு நிர்வாகிகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசால்அறிவிக்கப்பட்டுள்ள கபடி, கோ-கோ, சிலம்பம், மல்லர்கம்பம் ஆகிய விளையாட்டுகளுடன், தமிழர்களின் தொன்மையான தற்காப்புக் கலையான களரிப்பயட்டையும் இணைத்து ஊக்குவிக்க எடுத்துள்ள முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கது. இது வெறும் விளையாட்டுப் போட்டி மட்டுமல்லாமல், நலிவடைந்து வரும் பாரம்பரியக் கலை வடிவங்களுக்கு அரசு அளிக்கும் அங்கீகாரமாகவும், புத்துயிரளிக்கும் முயற்சியாகவும் அமைகிறது.

இத்திட்டத்தின் மூலம் களரிப்பயட்டு கலைக்கு, மாநில அளவில் ஆண்டுதோறும் நடைபெறும் இப்போட்டிகள் மூலம் களரிப்பயட்டு வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் நிலையானவாய்ப்புகள் கிடைக்கும். போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களை இக்கலையில் அதிகளவில் ஈடுபடுத்த முடியும். போட்டிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயிற்சி வளங்கள் மேம்பட வாய்ப்பு உருவாகியுள்ளது. பாரம்பரியக் கலைகளை உலக அளவில் கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ள அமைச்சரின்நோக்கம், களரிப்பயட்டு சர்வதேசத் தளத்தில் இடம் பெற நல்வாயப்பாக அமையும்.மேலும், களரிப்பயட்டு தமிழ்நாடு சங்கத்தின் சார்பில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மாநில அளவிலான களரிப்பயட்டு போட்டிகளையும் அரசின் இந்த முயற்சியுடன் இணைத்து ஊக்குவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்தநன்றியறிவிப்பை சங்கத்தின் தலைவர் தேவராஜன், மாநில பொதுச்செயலாளர் வீரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.