தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போக்சோ வழக்குகளை விசாரிக்க 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்

1 Nov 2026, 9:19 pm
போக்சோ வழக்குகளை விசாரிக்க 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்

போக்சோ வழக்குகளை விசாரிக்க 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்

சென்னை, நவ.1-பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதிகிடைக்கவும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டம், 2012-இன் கீழான வழக்குகளை மட்டும்விசாரிக்க 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

ரூ.46.59 கோடியில் 26 நீதிமன்றங்கள்மாநிலத்தில் ஏற்கெனவே 22 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகின்றன; மேலும் 4 நீதிமன்றங்கள்விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளன. நிலுவை வழக்குகளைக் கருத்தில் கொண்டு, 12 புதிய சிறப்பு நீதிமன்றங்களும் 14 கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களும் என மொத்தம் 26 நீதிமன்றங்கள் ரூ.46.59 கோடி செலவில் அமைக்கஅரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் 47 காவல் மாவட்டங்களுக்கு மொத்தம் 52 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் இருக்கும். பாதிக்கப்பட்டோருக்கு நீதியும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சத் தண்டனையும் உறுதி செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் வழக்குகளுக்கு 4 நீதிமன்றங்கள்போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்குடன், போதை மருந்துகள் மற்றும் மனமயக்கப் பொருட்கள்சட்டம் 1985-இன் கீழான வழக்குகளை விரைந்து முடிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது 11 சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படும் நிலையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூரில் தலா ஒன்றும், சென்னையில் ஒரு கூடுதல் நீதிமன்றமும் என 4 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.