தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்புக்கு வரம்பு விதிக்க தமிழக அரசு முடிவு

28 Oct 2026, 9:06 pm
அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்புக்கு வரம்பு விதிக்க தமிழக அரசு முடிவு

அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்புக்கு வரம்பு விதிக்க தமிழக அரசு முடிவு

சென்னை, அக். 28 -அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கப்படுவதையும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படு வதையும் தடுக்கும் வகையில், அவற்றுக்குக் கையிருப்பு வரம்பு விதிக்க அனுமதி வழங்குமாறு ஒன்றிய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்துக்கு மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது.

செப்டம்பர் மாத நிலவரப்படி, தமிழகத்தில் ஒரு கிலோ அரிசியின் சராசரிச் சில்லறை விலை ரூ. 61.66 ஆக இருந்தது. இதன் தேசிய சராசரி ரூ. 46.20ஆகும். துவரம் பருப்பு கிலோ ரூ. 134.23 ஆகவும் (தேசிய சராசரி ரூ. 124.41), வெங்காயம் கிலோ ரூ. 59.28 ஆகவும் (தேசிய சராசரி ரூ. 52.96) இருந்தது. பாமாயில் ஒரு லிட்டர் ரூ. 160.28 ஆக இருந்த நிலையில், அதன் தேசியசராசரி ரூ. 150.91 ஆக இருந்தது.

இந்நிலையில், உலகளாவியக் காரணிகளாலும், எல் நினோவால் ஏற்படக்கூடிய சாகுபடி பாதிப்புகளாலும் மொத்தவிற்பனையாளர்கள் அதிக அளவில் பொருட்களை இருப்பு வைக்க வாய்ப்புள்ளதாகவும், இதனால் பணவீக்கமும் நுகர்வோர் பாதிப்பும் அதிகரிக்கக்கூடும் என்றும் கடிதத்தில் தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

முன்மொழியப்பட்ட கையிருப்பு வரம்புகள்

நெல், அரிசியைப் பொறுத்தவரை, மொத்த விற்பனையாளர்களுக்கு 2,000 மெட்ரிக் டன்; சில்லறை விற்பனை

யாளர்களுக்கு 8 மெட்ரிக் டன். அரிசிஆலைகளுக்கு ஒரு மாத உற்பத்தித் திறனுக்கு இணையான அளவை கையிருப்புக்கான வரம்பாக நிர்ணயிக்கவும், துவரம் பருப்பு, உளுந்து போன்றவற்றைப் பொறுத்தவரை, மொத்த விற்பனையாளர்களுக்கு 200 மெட்ரிக் டன்; சில்லறை விற்பனையாளர்களுக்கு 5 மெட்ரிக் டன் வரம்பு விதிக்கவும் தமிழகஅரசின் முன்மொழிந்துள்ளது.

சமையல் எண்ணெய், வனஸ்பதிபோன்றவை, மொத்த விற்பனையா ளர்களுக்கு 500 குவிண்டால்; சில்லறை விற்பனையாளர்களுக்கு 30 குவிண்டால்எனவும், வெங்காயம்: மொத்த விற்பனையாளர்களுக்கு 25 மெட்ரிக் டன்; சில்லறை விற்பனையாளர்களுக்கு 2 மெட்ரிக் டன் எனவும் வரம்பு விதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.