டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரப்படுத்தும் உத்தரவை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்!
24 May 2026, 10:28 pm

டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரப்படுத்தும் உத்தரவை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்! சென்னை, மே 24 - டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரப்படுத்தும் உத்தரவை தமிழ் நாடு அரசு அமல்படுத்த வேண்டு மென டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் கே. திருச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு அரசுக்குச் சொந்த மான டாஸ்மாக் நிறுவனத்தின் மது பான சில்லரை விற்பனை கடைகளில் 23 ஆண்டு காலமாக தொடர்ந்து பணி புரிந்து வரும் ஊழியர்களை பணி வரன்முறை செய்ய வேண்டுமென அரசை டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தது.

ஆனாலும் அரசு தரப்பில் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால், சட்டப் போராட்டத்தை முன்னெ டுத்தது.

மாநிலம் முழுவதும் உள்ள பணி நிரந்தர தகுதி வழங்கல் சட்ட அம லாக்க அலுவலர் முன்பு நுற்றுக்கணக் கான ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி விண்ணப்பித்தனர்.

இந்த விண்ணப்பங்கள் மீது விசாரணை நடத்திய சட்ட அமலாக்க அலுவ லர்கள், இந்த ஊழியர்கள் இரண்டு ஆண்டு காலத்தில் 480 நாட்கள் தொடர்ந்து பணிபுரிந்ததற்கான சான்றாவணங்கள், சாட்சிகள், நிர்வாக தரப்பிலான எதிர் பதிலு ரைகள், சாட்சிகள் அடிப்படையில் டாஸ்மாக் ஊழியர்கள் 480 நாட்கள் தொடர்ச்சியாக பணி செய்ததை உறுதி செய்து, பணிநிரந்தர தகுதியை பெற்றுள்ளதாக உத்தரவுகள் பிறப் பித்துள்ளனர்.

ஏற்கெனவே, மதுரை, விருது நகர் மாவட்டங்களில் தொழிலாளர் உதவி ஆணையரும் பணிநிரந்தர தகுதி சட்ட அமலாக்க அலு வலர்களும் இத்தகைய உத்தரவுகள் பிறப்பித்தனர்.

இந்த பணிநிரந்தர உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிர்வா கம் செய்த மேல்முறையீட்டு மனுக் களும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத் தில் 174 டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் தாக்கல் செய்த வழக்குகளில் ஈரோடு மாவட்ட தொழி லாளர் உதவி ஆணையரும், பணி நிரந்தர தகுதி வழங்கல் சட்ட அம லாக்க அலுவலர் 14.05.2026 தேதி யில் பணிநிரந்தர தகுதியுடைவர்கள் என்று பிறப்பித்த உத்தரவு கிடைக்கப் பெற்ற 30 தினங்களுக்குள் டாஸ்மாக் நிர்வாகம் பணிநிரந்தரம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

23 ஆண்டுகால டாஸ்மாக் ஊழி யர்களின் பணி நிரந்தரம் என்ற வாழ்வாதார கோரிக்கையின் மீது சிஐடியு சம்மேளனமும், ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க மும் நடத்திய தொடர் சட்டப் போராட் டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் இது.

தமிழ்நாடு அரசு இந்த உத்த ரவை எதிர்த்து மேல்முறையீடு செய் யாமல், அனைத்து டாஸ்மாக் ஊழி யர்களையும் பணிவரன்முறைப் படுத்திட வேண்டுமென டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலி யுறுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.