தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க ஆந்திர அரசுடன் தமிழ்நாடு அரசு பேச்சு!

16 Jul 2026, 11:45 pm
தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க ஆந்திர அரசுடன்  தமிழ்நாடு அரசு  பேச்சு!
<p><strong>தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க ஆந்திர அரசுடன் தமிழ்நாடு அரசு பேச்சு!</strong></p><p>சென்னை, ஜூலை 16- ஆந்திரப் பிரதேச கடல் பகுதி யில் மீன்பிடிப்பது தொடர்பாக எழுந் துள்ள மோதல்களால், தமிழக மீன வர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்ப ட்டுள்ளது. ஆந்திர மாநில மீனவர்களின் போராட்டத்தை யடுத்து, இந்திய கடல்சார் மண்டலச் சட்டத்தின்படி, ஆந்திர அரசின் 12 கடல் மைல் எல்லைக்குள் நுழைந்த தாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த 7 விசைப்படகுகள் ஆந்திராவின் ஜீவலடின் துறைமுகத்தில் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க தமிழ்நாடு அரசு உயர்மட்ட நட வடிக்கைகளை மேற்கொண்டு வரு கிறது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் தலைமையில் படகு உரி மையாளர் சங்கங்களுடன் பலமுறை ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப் பட்டன. மேலும், அதிகாரிகளை நேரடியாக ஆந்திராவுக்கு அனுப்பி படகுகளை விடுவிக்கத் தொடர் வலி யுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, ஜூலை 11, 2026 அன்று நெல்லூரில் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில அதி காரிகளுக்கு இடையேயான உயர் மட்டக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக மீன்வளத்துறை இயக்குநர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சி யர் உள்ளிட்டோர் பங்கேற்று, சிறை பிடிக்கப்பட்ட படகுகளை உடனடி யாக விடுவிக்குமாறும், மீனவர் களின் வாழ்வாதாரத்தைக் கருத் தில்கொண்டு ஆந்திரக் கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக் குமாறும் கேட்டுக்கொண்டனர். இரு மாநில மீனவர்களிடையே நிலவும் மோதல்களைத் தவிர்த்து, சுமுகமான சூழலை உருவாக்கவும், மீனவர்கள் தடையின்றி மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளவும் ஆந்திர அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து தீவிர ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.