முந்தய பக்கம்

224 திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ரூ.15.68 கோடி மானியம்

31 Oct 2026, 11:31 pm
224 திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ரூ.15.68 கோடி மானியம்

224 திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ரூ.15.68 கோடி மானியம்

சென்னை, அக். 31 -குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட நல்ல கருத்துகளைக் கொண்ட தமிழ்த் திரைப்படங்களை ஊக்குவிக்கும் அரசு மானியமாக, 224 தயாரிப்பாளர்களுக்கு ரூ.15.68 கோடிக்கான காசோலைகளை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார். சென்னை சேப்பாக்கம்கலைவாணர் அரங்கில் இவ்விழா நடைபெற்றது.

2015 முதல் 2022 வரையிலான 8 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 28 படங்கள் வீதம் மொத்தம் 224 படங்களை ஓய்வுபெற்ற நீதியரசர் எஸ்.கே.கிருஷ்ணன் தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்தது. ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் தலா ரூ.7 லட்சம் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய அமைச்சர், தமிழ் சினிமா மக்களின் வாழ்க்கை, பண்பாடு, சமூகப் பிரச்சனைகளைப் பிரதிபலிப்பதாகவும், பெண் சிசுக்கொலைக்கு எதிரான விழிப்புணர்வில் ‘கருத்தம்மா’ போன்ற படங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது என்றும் கூறினார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த மானியம் மீண்டும் வழங்கப்படுவதாகத் தெரிவித்த அவர், இனி விருதுகளும் மானியங்களும்தகுதி அடிப்படையில் மட்டுமே வெளிப்படையாக வழங்கப்படும் என்றும், இது முதலமைச்சரின் உறுதியான வழிகாட்டுதல் என்றும் குறிப்பிட்டார்..

Share
FacebookXWhatsAppTelegram