தீக்கதிர் முக்கிய செய்திகள்
11 Oct 2026, 10:48 pm

மாணவர்களுக்கு கேக்: ரூ.9.27 கோடியில் கொள்முதலுக்கு டெண்டர்

சென்னை: குழந்தைகள் தினமான நவம்பர் 14 ஆம் தேதி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காகப் பள்ளிக் கல்வித் துறை ரூ.9.27 கோடி ஒதுக்கியுள்ளது; கொள்முதலுக்காகத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் டெண்டர் கோரியுள்ளது.தலா 45 கிராம் எடையுள்ள 61,84,566 ஸ்பாஞ்ச் கேக் துண்டுகள் வாங்கப்படவுள்ளன. மிக்ஸ்டு ஃப்ரூட், வெண்ணிலா, ரிச் சாக்லேட், பட்டர்மில்க் வெண்ணிலா உள்ளிட்டவகைகள் இதில் அடங்கும். இந்த மாத இறுதிக்குள் டெண்டரை இறுதி செய்து கொள்முதல் ஆணை வழங்கவும், அடுத்த மாதம் 10 ஆம் தேதிக்குள் மாவட்டக் கிடங்குகளுக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. நவம்பர் 11 முதல் 13வரை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு, நவ.14 ஆம் தேதி காலை மாணவர்களுக்கு வழங்கப்படும்.

கிடங்கில் பெறும்போது அறிவிக்கப்பட்ட காலாவதிக் காலத்தில் குறைந்தது 30 நாட்கள் மீதமிருக்க வேண்டும்.கெட்டுப்போன தன்மை, பூஞ்சை, செயற்கை ரசாயனங்கள், டிரான்ஸ் கொழுப்புகள், தடை செய்யப்பட்டநிறமூட்டிகள் ஆகியவை இருக்கக் கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ரேசன் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம்

சென்னை: வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில், நியாய விலைக் கடைகளில் கிலோ ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படுவதாகக் கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.முதல் கட்டத்தில் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடமிருந்தும் (நாஃபெட்),இரண்டாம் கட்டத்தில் அதனுடன் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திடமிருந்தும் வெங்காயம் வாங்கப்பட்டது. மூன்றாம் கட்டமாக, தேசிய நுகர்வோர் கூட்டுறவுஇணையத்திடமிருந்து 700 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவுத் துறையின்கீழ் செயல்படும் 8,914 நகர்ப்புற நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில்,ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வீதம் வழங்கப்படும். சென்னையில் அக்.10 முதலும், பிற மாவட்டங்களில் அக்.11முதலும் விற்பனை தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகார்களைப் பொது மக்கள் 96005 61969 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம்.

காப்பறையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின், வேட்பாளர்கள் முன்னி

லையில் விவிபேட் சீட்டுகள் கருப்பு உறைகளில் வைக்கப்பட்டன; வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூடி முத்திரையிடப்பட்டன. தேர்தல் வழக்குகளின் பட்டியலைச் சென்னை உயர்நீதிமன்றம் இறுதி செய்யும் வரை இவை காப்பறையில் பாதுகாக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்தெரிவித்தார்.

ஜெம் வீரமணி இடங்களில் எஸ்ஐடி சோதனை

சென்னை: சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புடைய ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் ராயப்பேட்டை வீடு, கோபாலபுரம் அலுவலகம், தேனாம்பேட்டை வீடு ஆகிய இடங்களில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர்சோதனை நடத்தினர். புகார்களுக்காக அறிவிக்கப்பட்ட வாட்ஸ் அப் எண்கள் மூலம் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதுவரை 6 வழக்குகள் பதிவாகியுள்ளன (5 போக்சோ வழக்குகள், தற்கொலைக்குத் தூண்டிய வழக்கு ஒன்று). வீரமணி, உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

11 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்பட 11 மாவட்டங்களில் திங்கட்கிழமை (அக்.12) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவுப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சிநிலவுகிறது. இதனால் அக்.12 அன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, சிவகங்கை, சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.ஏனைய தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள், அரபிக்கடல் பகுதிகளில் மீன்வர்களுக்கான எச்சரிக்கைஎதுவும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.