உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள் பறிபோகாமல் தடுத்து நிறுத்த வேண்டும்!
5 Jun 2026, 8:50 pm

உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள் பறிபோகாமல் தடுத்து நிறுத்த வேண்டும்!

சென்னை, ஜூன் 5 - உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக் களுக்கான 152 இடங்களை, ஒன்றிய அரசின் ஒதுக்கீட்டிற்கு செல்லா மல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசை, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது: உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியை அளிக்கிறது தமிழ்நாட்டில் ‘சூப்பர் ஸ்பெஷா லிட்டி’ என அழைக்கப்படும் ‘உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு’ களுக்கான 152 காலியிடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு மாற்ற வேண்டும் என மாண்பமை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

2025-ஆம் ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 430 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களுக்கு நடை பெற்ற கலந்தாய்வில், 215 இடங்கள் பணியில் உள்ள அரசு மருத்துவர் களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்த இடங்களில் 63 இடங்கள் மட்டுமே கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு, இரண்டாவது கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலை யில், 152 இடங்கள் காலியாக இருந்தன.

தமிழ்நாட்டு மருத்துவக் கட்டமைப்புக்குப் பாதிப்பு இது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் மேற்கண்ட 152 இடங் களை அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தமிழகத்தின் உரிமையைப் பறிப்பது மட்டுமின்றி, கிராமப் புறங்களிலும், மலைப்பகுதி களிலும், பல்வேறு அரசு மருத்துவ மனைகளிலும் பணிபுரியும் அரசு மருத்துவர்களின் உயர் படிப்புக் கனவைப் பறித்து விடும்.

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கட்டமைப்புக்கும், கிராமப்புற மக்களுக்கு உயரிய மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.

அரசுப் பணி மருத்துவர்களின் உரிமையை உறுதி செய்க! எனவே, தமிழ்நாடு அரசு இப்பிரச்சனையின் அவசரத் தன்மை யைக் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றத்தில் வலுவான வாதங் களை முன்வைத்து 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களும் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படுவதை தடுத்திடவும், தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பணி மருத்துவர்கள் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பிற்குரிய இடங்களில் சேருவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.