தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

1 hour before
சென்னை விரைவு செய்திகள்

சென்னை விரைவு செய்திகள்

சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

செ ன்னை, அக். 1 –தெருக்கள் மற்றும் சாலை களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

ஜாமீன் மனு ஒன்றின் விசா ரணையின் போது முதல் தகவல் அறிக்கையில் சாதிப் பெயருடன் தெருக்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய நீதிபதி என். ரமேஷ், இதுகுறித்து உயர் நீதி மன்றப் பதிவுத்துறை மூலம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இந்நிலை யில், தெருக்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான அர சாணைக்கு எதிரான வழக்கு மதுரை கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், இது குறித்து விரிவான பதில்மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நவ.6 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

தண்டவாளத்தை கடக்க கூடாது: மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சிதம்பரம், அக்.1-சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் முத்தையா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்வதை தடுக்கும் வகையில், மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்புப் படை காவல்துறையினர் .சிதம்பரம் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்நிகழ்ச்சியில், ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலர்கள் செந்தில்நாதன், ரமேஷ்குமார் மற்றும் காவலதுறையினர் மாணவர்களுக்கு ரயில் தண்டவாளத்தை கடக்ககூடாது என்று அறிவுரை வழங்கினர். மேலும், ரயில்வே தண்டவாளத்தில் மனித உருவ பொம்மையை வைத்து, ரயில் விபத்துகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விளக்கினர்.மாணவர்கள் தண்டவாளத்தைக் கடந்து செல்லாமல், ரயில்வே மேம்பாலப் படிக்கட்டுகளைப் பயன்படுத்திப் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும் என வலியுறுத்தினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.