சென்னை விரைவு செய்திகள்
8 Oct 2026, 1:54 am

ஓசூரில் பிறப்பு, இறப்பு பதிவுக்கு

புதிய நடைமுறைகள் அமல்கிருஷ்ணகிரி, அக்.7-ஓசூர் மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு பதிவுகள் தொடர்பாக புதிய நடை முறைகள் அமலுக்கு வந்துள்ளதாகமாநகராட்சி ஆணையர் முகமது ஷபீர் ஆலம் தெரிவித்து உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மாநகராட்சி பகுதிகளில் நிகழும் பிறப்பு, இறப்புகளை சம்பவம் நடை பெற்ற நாளில் இருந்து ஓராண்டுக்குள் வழக்கமானநடைமுறையில் மாநகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். ஓராண்டுக்கு மேல் 2 ஆண்டுகளுக்குள்பதிவு செய்யப்படாமல் விடுபட்ட பிறப்பு, இறப்புகளை பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர்,துணை ஆட்சியர் அல்லதுஅங்கீகரிக்கப்பட்ட நிர்வாக நீதிபதியின் உத்தரவை பெற வேண்டும். இதற்காக பிறப்பு இறப்பு தொடர்பானஉண்மைத் தன்மை சரிபார்க்கப்பட்டு, காலதாமதத்துக்கான நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் செலுத்திய பின்னர்பதிவு செய்யப்படும்.2 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்யப்படாமல் விடுபட்ட பிறப்பு, இறப்பு களை பதிவு செய்ய முதல் வகுப்புநீதித்துறை நீதிபதி உத்தரவை பெற வேண்டும். பிறப்பு இறப்பு தொடர்பான உண்மைத் தன்மை சரிபார்க்கப்பட்டு,காலதாமதத்துக்கான கட்டணம். செலுத்திய பின்னர் பதிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

ஆய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி,அக். 7-கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள்குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெ.இ.பத்மஜா தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த பருவமழைக்கால மழை யளவு விவரம், மழையளவி விவரம்மற்றும் செயல்பாடு, மனைக்கரைத்தில் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் விவரம், ஏற்கனவே ஏற்பட்டபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் விவரம் மற்றும் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகள்விவரம் உள்ளிட்ட பல்வேறு தக வல்கள் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.

போலீஸ் காவலில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் இழப்பீடு, அரசு பணி கோரி மனு

கடலூர்,அக்.7- போலீஸ் காவலில் உயிரிழந்த சுப்பிரமணியன் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் இழப்பீடும், அவரது மனைவிக்கு அரசு பணியும் வழங்க வேண்டும் எனகோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர், அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோ ருக்கு சுப்பிரமணியனின் மனைவி ரேவதி அனுப்பி உள்ள மனுவில் கூறி யிருப்பதாவது:

எனது கணவர் சுப்பிரமணியன் (37), கடந்த 28.05.2015 அன்று இரவு நெய்வேலி நகரிய போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டார். போலீஸ் காவலில் சட்டவிரோதமாக வைத்து 6 நாட்கள் அடைத்து துன்புறுத்தியதால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி 6.6.2015 அன்று உயிரிழந்தார்.இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. தற்போது கடலூர் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதுவரை அரசு தரப்பில் 18 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 21.10.2026 அன்று நடைபெற உள்ளது.

எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின்படி எனக்கு ஏற்கெனவே ரூ.90 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இழப்பீட்டு தொகை யில் மீதமுள்ள ரூ.12 லட்சத்தை வழங்க வேண்டும். மேலும் அரசு சட்ட விதி

களின்படி எனக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

பெண்களுக்கு ஓட்டுநர் திறன் மாநகராட்சியுடன் ஓப்பந்தம்

சென்னை, அக்.7-சென்னையில் பெண்க ளின் போக்குவரத்து அணு கல், பாதுகாப்பு மற்றும்

பொருளாதாரப் பங்கேற்பை மேம்படுத்தும் நோக்கில் பெருநகர சென்னை மாநகராட்சியும், ஆசாத்அறக்கட்டளையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.மாநகராட்சி ஆணை யாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் மூலம், விளம்புநிலைப்பெண்கள்தொழில்முறை ஓட்டுநர்க ளாகத் திறன் பெறுவதுடன், கண்ணியமான வேலை வாய்ப்பு மற்றும் பொரு ளாதாரச் சுதந்திரம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மின் கசிவால் தீயில் கருகிய 200 கோழிகள்

திருவண்ணாமலை,அக்.7-திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த உக்கல் பெண்டை கிராமத்தில் மின் கசிவு காரணமாக கோழிப்பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 200-க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகள் தீயில் கருகின. மேலும்,சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான கோழிக் கொட்டகை மற்றும் கோழித் தீவனங்கள் உள்ளிட்ட பொருட்கள்சேதமடைந்தன.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட நிபந்தனையில் தளர்வு; தமிழக அரசு அறிவிப்பு

சென்னை,அக்.7-அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான நிபந்தனையில் தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது நடைமுறையில் இருக்கும் நிபந்தனைகளின்படி, பிரசவித்த தாயார் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் காரணமாக, ஆரம்பத்தில் இக்குடும்பத்தினர் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் பயனடைய இயலாத நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு இந்த திட்டத்திற்கான நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையின் தாய் தமிழ்நாட்டில் பிறந்து, திருமணமாகி வெளிமாநிலத்திற்கு சென்றிருந்தாலும், அத்தாயின் தாய் - தந்தையர் இருவரும் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருந்து, அதற்கான உரிய ஆவண ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், அந்த குழந்தைக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் உடன் வழங்கப்படும்.

அதன்படி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிரசவித்த உமா மகேஸ்வரி குழந்தைக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் புதனன்று (அக்.7) வட்டார மருத்துவ அலுவலரால் வழங்கப்பட்டுள்ளது. இந்த தளர்வு ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும் பொருந்தும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

புதிய வீடுகள்:அமைச்சர் வன்னியரசு நேரில் ஆய்வு

பொள்ளாச்சி,அக்.7கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப், கோழிக்கமுத்தி, எருமைப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்காக புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீடுகளைச் சமூக நீதி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வன்னியரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, வீடுகளின் கட்டுமானப் பணிகள் குறித்து ஒப்பந்ததாரர்களிடம் கேட்ட றிந்த அமைச்சர், பணி களை விரைந்து முடித்துத் தாமதமின்றி பழங்குடியின மக்களிடம் வீடுகளை ஒப்ப டைக்க அறிவுறுத்தினார்.