முந்தய பக்கம்

வெங்காய விலையைக் குறைக்க 700 டன் கொள்முதல்

10 Oct 2026, 12:16 am
வெங்காய விலையைக் குறைக்க 700 டன் கொள்முதல்

வெங்காய விலையைக் குறைக்க 700 டன் கொள்முதல்

சென்னை, அக்.9 -கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ், சென்னை தண்டையார்பேட்டை சரக்கு ரயில் முனையத்தில் அக்.9 அன்று, தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வந்துள்ள 700 மெட்ரிக் டன் வெங்காயத்தைப்பார்வையிட்டு,நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “வெங்காய விலை அண்மைக் காலமாக உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தவும், பொது மக்களுக்கு நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யவும், தமிழ்நாடு அரசு சந்தை குறுக்கீட்டு நடவடிக்கையாக வெங்காயத்தைக் கொள்முதல் செய்து, கூட்டுறவுத் துறையின் நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனைசெய்து வருகிறது.

மூன்றாம் கட்டமாக, கூட்டுறவுத் துறையின் 8,914 நகர்ப்புற நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில், ஒரு குடும்ப அட்டைக்கு 1 கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் விற்கப்படும். மக்களின் தொடர்ச்சியான தேவையையும் வரவேற்பையும் கருத்தில் கொண்டு, தற்போது மூன்றாம் கட்டமாக 700 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram