தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தூய்மைப் பணி தனியார்மய முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்!

23 Jun 2026, 9:13 pm
தூய்மைப் பணி தனியார்மய முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்!

தூய்மைப் பணி தனியார்மய முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்!

சிஐடியு உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சம்மேளனம் வலியுறுத்தல்

விருதுநகர், ஜூன் 23- தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளின் தூய்மைப்பணிகள் உள்ளிட்ட இதர அத்தியாவசியப் பணிகளைத் தனியார்வசம் ஒப்படைப்பதற்காக ஒப்பந்தப் புள்ளிகள் கோரியுள்ள அரசின் நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சம்மேளனம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்துச் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.ஆர். கணேசன், பொதுச்செயலாளர் ஆர். பாலசுப்பிரமணியன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: துப்புரவு, குடிநீர், ஓட்டுநர்கள், மின்பராமரிப்பு மற்றும் டெங்கு தடுப்பு உள்ளிட்ட பணிகளைத் தனியார்மயமாக்கும் அரசாணைகள் 152, 139 ஆகியவற்றைத் தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கடந்த ஆட்சியில் தனியார்வசம் ஒப்படைக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மைப் பணிகளில் எடைக் கணக்கில் கல், மண்ணை அள்ளிப் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றன. அதோடு, குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு வேலை நேரத்தை உயர்த்தி, ஒப்பந்த நிறுவனங்கள் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டின. எனவே, மக்களின் வரிப்பணத்தைப் பாதுகாக்கும் வகையில் இப்பணிகளை நகராட்சி நிர்வாகமே நேரடியாக மேற்கொள்ள வேண்டும். தேர்தல் கால வாக்குறுதியின்படி, 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தொழிலாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி அவுட்சோர்சிங் தொழிலாளர்களுக்குக் கடந்த 2023-இல் பிறப்பிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியச் சுற்றறிக்கையை இந்த அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். மேலும், கொரோனா காலத்தில் உயிரைப் பணையம் வைத்துப் பணியாற்றிய முன்களப்பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.15,000 ஊக்கத்தொகையை நிலுவையின்றி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.