தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு மருந்தாளுநர் சங்கத்தின் முப்பெரும் விழா

10 Oct 2026, 9:31 pm
அரசு மருந்தாளுநர் சங்கத்தின் முப்பெரும் விழா

அரசு மருந்தாளுநர் சங்கத்தின் முப்பெரும் விழா

திருவில்லிபுத்தூர், அக்.10-தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம், உலக மருந்தாளுநர் தின விழா மற்றும் ஓய்வுபெற்றோருக்குப் பாராட்டு விழா என முப்பெரும் விழா, திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.விழாவுக்கு மாவட்டத் துணைத் தலைவர் முத்துக் குமார் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் மணிசங்கர் உள்ளிட் டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைத் தலைவர் பலராமன் வரவேற்றார். பொதுக்குழுக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.கருப்பையா பேசினார்.

மாவட்டச் செயலாளர் பாரதி, மாவட்டப் பொருளாளர் சிவகுமார் ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தனர். தொடர்ந்து, மாநிலத் தலைவர் விஜயகுமாரன் நிறைவுரையாற்றினார். கூட்டத் தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக ஜி.சக்திவேல், மாவட்டச் செயலாளராக பாரதி, பொருளாளராக சிவகுமார் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஓய்வுபெற்ற மருந்தாளுநர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், மருத்துவத் துறையில் காலியாக உள்ள 1,260-க்கும் மேற்பட்ட மருந் தாளுநர் பணியிடங்களை காலமுறை ஊதிய அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும்; அரசு நகர்ப்புற சுகாதார நிலையங்கள், ஆர்.பி.எஸ்.கே., எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம், காசநோய் கட்டுப்பாட்டுச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளில் நீண்டகாலமாகப் பணியாற்றும் மருந்தாளுநர்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; நோயாளிகளின் எண்ணிக் கைக்கு ஏற்ப கூடுதல் பணியிடங்களை உருவாக்கி நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட இணைச் செயலாளர் சுந்தரேசன் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.