தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாடு அரசு ஊழியர் ஓய்வூதியர் சங்க 10-வது மாவட்ட பிரதிநிதிகள் பேரவைக் கூட்டம்

18 hours before
தமிழ்நாடு அரசு ஊழியர் ஓய்வூதியர் சங்க  10-வது மாவட்ட பிரதிநிதிகள் பேரவைக் கூட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் ஓய்வூதியர் சங்க 10-வது மாவட்ட பிரதிநிதிகள் பேரவைக் கூட்டம்

காஞ்சிபுரம்,ஆக.23-காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்மற்றும் ஓய்வூதியர் சங்கத்தின் 10-வதுமாவட்ட பிரதிநிதிகள் பேரவைக் கூட்டம்சனிக்கிழமையன்று (ஆக.22) நடைபெற்றது.

கூட்டத்திற்குத் மாவட்டத் தலைவர் ஜா. துரைவேலு தலைமை தாங்கினார். உத்திரமேரூர் வட்டக்கிளை செயலாளர் வி.ஏ. சுந்தரவேலு அஞ்சலி தீர்மானத்தை வாசிக்க, ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் யாசித்தாராமன் வாழ்த்துரை வழங்கினார். மாவட்டசெயலாளர் எஸ். குமரவேலு செயலாளர் அறிக்கையைச் சமர்ப்பித்தார். மாநில செயலாளர் பி. மகேஸ்வரி மற்றும் மாவட்ட துணைத் தலைவர் எம்.ஆர். இராமாஞ்ஜலு ஆகியோர்பேசினர்.

தீர்மானம்கூட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், 70 வயது

கடந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டக் குளறுபடிகளைக் களைதல், குடும்பபாதுகாப்பு நிதியை உயர்த்துதல் மற்றும் அங்கன்வாடி, சத்துணவு ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம்வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.