முந்தய பக்கம்

தமிழக அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் நியமனமா? அரசாணைக்கு ஜாக்டோ-ஜியோ கண்டனம்

29 Oct 2026, 10:49 pm
தமிழக அரசுத் துறைகளில்  அவுட்சோர்சிங் நியமனமா? அரசாணைக்கு ஜாக்டோ-ஜியோ கண்டனம்

தமிழக அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் நியமனமா? அரசாணைக்கு ஜாக்டோ-ஜியோ கண்டனம்

சென்னை, அக். 29அரசுத் துறைகளுக்கான ஒப்பந்தப் பணியாளர்களை அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறு

வனமான ‘ஓஎம்சிஎல்’ (OMCL) மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும்என்ற அரசாணைக்கு, அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ கண்டனம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 21 அன்று தேதியிட்ட இந்த அரசாணையின்படி, அரசுத் துறைகள் நேரடியாகவோ தனியார் முகமைகள் மூலமாகவோ ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்க முடியாது என்றும், தகுதியற்றவர்களின் நியமனம், ஊதியம்முறையாக வழங்கப்படாதது போன்ற புகார்களைத் தவிர்த்து, வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரவே இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வும் அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.ஆனால், இந்த நடவடிக்கை 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கும் சமூகநீதிக்கும் எதிரானது என ஜாக்டோ-ஜியோ குற்றம் சாட்டியுள்ளது. எனவே,இந்த அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், நிரந்தரப் பணியிடங்களை நிரப்புவதாகத்தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் அந்த அமைப்புவலியுறுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram