தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழக அரசு உடனடியாகத் தொழிலாளர் கொள்கையை வெளியிட வேண்டும்: அ.சவுந்தரராசன்

13 Jul 2026, 9:59 pm
தமிழக அரசு உடனடியாகத் தொழிலாளர் கொள்கையை வெளியிட வேண்டும்: அ.சவுந்தரராசன்
<p><strong>தமிழக அரசு உடனடியாகத் தொழிலாளர் கொள்கையை வெளியிட வேண்டும்: அ.சவுந்தரராசன்</strong></p><p>சென்னை: தமிழக அரசு தனது தொழில் கொள்கையைப் போல, தொழிலாளர் களுக்கான தனித்துவமான ‘தொழிலாளர் கொள்கையை’ வெளியிட வேண்டும் என்று சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் அ. சவுந்தரராசன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை மற்றும் புறநகர் முறைசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் 25-ஆவது ஆண்டு வெள்ளிவிழா சைதாப்பேட்டையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று அவர் பேசியதாவது: நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற் பத்தியில் 68 விழுக்காடு பங்களிப்பை வழங்கும் முறைசாரா தொழிலாளர்களுக்கு எவ்வித சமூக பாதுகாப்பும் இல்லை. அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச மாத ஊதியமாக ரூ.26 ஆயிரத்தை அரசுத்துறைகளே அமல்படுத்த மறுக்கின்றன. முதலமைச்சர் ஜோசப் விஜயைச் சந்தித்த போது, தமிழகத்தில் உள்ள ஒரு கோடி முறை சாரா தொழிலாளர்களுக்குக் குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரம் கூடுதலாக வழங்க உத்தர விடக் கோரினோம். இதனால் மக்களின் பணப் புழக்கம் அதிகரித்து பொருளாதாரம் வளரும். ஆலைகளில் தொழிலாளர்களின் உரிமை கள் பறிக்கப்படுகின்றன. கூட்டுபேர உரிமை என்பதை கூட்டு பிச்சை எடுப்பதாக அரசு கருதக்கூடாது. ஊழலற்ற ஆட்சிக்கான முயற்சிகளுக்குத் துணை நிற்போம்; அதே நேரம் உரிமைகள் பறிக்கப்படும்போது போராடுவோம். அரசு உடனடியாகத் தொழி லாளர் கொள்கையை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.