அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக 1,500 நர்சிங் இடங்கள்
17 Jul 2026, 9:16 pm
<p><strong>அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக 1,500 நர்சிங் இடங்கள்</strong></p><p>சென்னை, ஜூலை 17 - தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்து வக் கல்லூரிகளில் கூடுதலாக 1,500 பி.எஸ்.சி., நர்சிங் இடங்களை உருவாக்கி மாணவர் சேர்க்கை நடத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னை, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 இடங்களும், செங்கல்பட்டு, சேலம், மதுரை, தேனி அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 70 இடங்களுமாக தமிழ்நாட்டில் தற்போது 6 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 510 பி.எஸ்.சி நர்சிங் படிப்பு இடங்கள் உள்ளன. இந்நிலையில், நடப்பாண்டில் மேலும் 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இப்படிப்புகள் தொடங்கப்படுகின்றன. வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதுதவிர, கள்ளக்குறிச்சி, திரு வள்ளூர், கிருஷ்ணகிரி, இராமநாதபுரம், அரியலூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், ஈரோடு ஆகிய அரசு மருத்துவக் கல்லூரி களிலும் பி.எஸ்.சி நர்சிங் படிப்புகள் தொட ங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. ஏற்கெனவே திருவள்ளூர், திருப்பூர், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்கள் கூடுத லாகச் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>
