தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தவறுதலாக கோவில்கள் பெயருக்கு மாறிய 3 ஆயிரம் ஏக்கர் தடையை நீக்கிய தமிழக அரசு; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

14 Jul 2026, 9:04 pm
தவறுதலாக கோவில்கள் பெயருக்கு மாறிய 3 ஆயிரம் ஏக்கர் தடையை நீக்கிய தமிழக அரசு;  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

தவறுதலாக கோவில்கள் பெயருக்கு மாறிய 3 ஆயிரம் ஏக்கர் தடையை நீக்கிய தமிழக அரசு; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

சென்னை, ஜூலை 14 - திருக்கோவில்கள் பெயரில் தவறுதலாக மாற்றம் செய்யப் பட்ட நிலங்களை விற்பதற்கான தடையை, தமிழக அரசு நீக்கி யிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

நிலம், குடியிருப்பு உரிமை பாதுகாக்கப்பட்டு உள்ளது!

கரூர் மாவட்டத்தில் இனாம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்கள் 60 ஆண்டு களுக்கும் மேலாக பட்டா பெற்று பயன்படுத்தி வந்த இடத்தை விற்பதற்கு தடை விதிக்கப் பட்டிருந்தது. இந்த தடையை 9.7.2026 அன்று தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை 3084 ஏக்கருக்கு விலக்கிக் கொண்டுள்ளது. இந்த தடைநீக்க ஆணையை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது. மக்களின் நில உரிமை, குடியிருப்பு உரிமை இந்த உத்தரவு மூலம் பாதுகாக்கப் பட்டிருக்கிறது.

மாநிலம் முழுமைக்குமான தீர்வை ஏற்படுத்த வேண்டும்!

இதேபோல், மாநிலம் முழு வதும் இனாம் நில விவசாயி களும், பொதுமக்களும் பல்லா யிரக்கணக்கானோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த அரசாணை யை முன்மாதிரியாகக் கொண்டு இனாம் நில பிரச்சனைக்கு முழு மையாக தீர்வு காண வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்து கிறது.

கோவில் சொத்துக்களை அபகரித்த பாஜக-வினர்!

தமிழ்நாட்டில் பாஜக, இந்து முன்னணி, இந்து மகா சபை போன்ற சங்-பரிவார் அமைப்புக் களின் நிர்வாகிகள் ஆக்கிரமித்து வைத்திருந்த கோவிலுக்கு சொந்த மான நிலங்கள் - நூற்றுக்கணக் கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள்- கடந்த ஆட்சிக் காலத்தில் மீட்கப்பட்டன என்பதை நினைவுபடுத்துகிறோம். அரசு கோவிலிலிருந்து வெளியேற வேண்டுமென்று சொல்வதே கோவில் சொத்துக்களை சூறை யாடுவதற்கு சங்-பரிவார் தீட்டும் சதித் திட்டம் தான் என்பதை வரலாறு நிரூபித்துக் கொண்டே வந்திருக்கிறது.

இந்து பக்தர்களுக்கு எதிராக சங்-பரிவாரங்கள்!

தற்போது, அயோத்தியில் ராமர் கோவிலிலேயே உண்டி யலைத் திருடிய கூட்டம் - அதைப்பற்றி பேச மறுக்கிற கூட்டம்- இப்போது இந்து பக்தர் களுக்கு அவர்களது உரிமைகள் நிலைநாட்டப்பட்டதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தமிழ்நாடு அரசை தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார்கள். இந்த சக்திகள் மீண்டும் நீதிமன்றத்தின் மூலம் மக்களின் உரிமைகளை தடுக்கும் முயற்சி யில் ஈடுபட்டுள்ளனர். சங்-பரிவார் அமைப்புக்கள் இதை எதிர்த்து நியாயமற்ற விமர்சனங்களை முன்வைப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.